ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்?

ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Mar 6, 2019, 10:18 AM IST
ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்? title=

ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 (Galaxy S10) மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான விற்பனையை தொடங்கவில்லை.

இந்த 5ஜி கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட்போனானது வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் எல்ஜி நிறுவனமும் 5ஜி வசதி கொண்ட வி50 திங்க் (V50 ThinQ) மாடலை ஏப்ரல் மாதம் மத்தியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Trending News