திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனைகள் கவனிக்கப்படாமல், அதில் கூடுதல் கவனம் செலுத்தாமல் இருப்பதால் அண்மைக்காலமாக விவாகரத்துகள் அதிகரிக்கின்றன. இருவரும் மனம் ஒத்துப்போகாமல், திருப்தி இல்லாமல் நீண்ட நாட்கள் வாழ முடியாது என்கிற நிலையை எட்டும்போது இந்த முடிவை எடுக்கின்றனர்.
ஆனால், அத்தகைய முடிவு எடுக்கும் முன்பு சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்த நேரத்தில் இங்கே சொல்லப்படும் 3 செயலிகள் உங்களுக்கு வழிகாட்டும். திருமண உறவில் செல்ல இருக்கும் புதிய தம்பதிகளுக்கும் இந்த செயலிகள், தேவையான மற்றும் ஆரோக்கியமான தகவல்களை கொடுக்கும்.
1. கோரல் (Coral)
2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த செயலி நிபுணர்களைக் கூட வெகுவாக கவர்ந்துள்ளது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் என இரண்டுக்குமான ஆலோசனைகள் இந்த செயலிகளில் இருக்கும். 2021 ஆம் ஆண்டு இந்த செயலியில் மீண்டும் couples connect என்ற அம்சம் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இருவருக்கும் இடையில் தாம்பத்ய உறவை அதிகரிக்க இந்த அம்சத்தில் கூடுதல் டிப்ஸ்கள் இருக்கும். இது இருவருக்குமான உரையாடலை அதிகப்படுத்த உதவும்.
உங்களை படிப்படியாக ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு வழிநடத்தும் இந்த செயலியில் ஏராளமான இலவசமான ஆலோசனைகளும் இருக்கின்றன. அதேநேரத்தில் மிக முக்கியமான தகவல்களை பணம் கொடுத்து படிக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | மஞ்சள் காமாலையை கண்டுபிடிக்கும் புதிய செயலி
2. ரோசி (Rosy)
பெண்களுக்கு பிரத்யேகமாக உதவக்கூடிய செயலி. கணவன் மனைவி, இருவருக்குமான உறவில் மேற்கொள்ள வேண்டிய தனிப்பட்ட மேம்பாடுகள் குறித்து பெண்களுக்கான ஆலோசனைகள் இடம்பெற்றிருக்கும். உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும், மண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழவும் வழிநடத்தும். உங்களுடைய அணுகுமுறையில் மேற்கொள்ளும் மாற்றம் கணவனை ஈர்க்க இந்த செயலியில் இருக்கும் ஆலோசனைகள் உதவும்.
குரல் மற்றும் வீடியோ என இரு வகையிலான ஆலோசனைகளும் இந்த செயலியில் இருக்கும். உங்கள் எண்ண ஓட்டத்தை மண வாழ்க்கைக்கு ஏற்ப தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இந்த செயலி, குறைவான தகவல்கள் மட்டும் இடம்பெற்றிருக்கும்.
கைண்டு (Kindu)
பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான செயலி. மண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவும், தம்பதிகளுக்கு இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவை மேம்படுத்தவும் இந்த செயலி உதவும். நேர்மறையாக இருவரும் இருப்பது எப்படி? என்னவெல்லாம் செய்யலாம், எவற்றையெல்லாம் தடுக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். இருவருக்கும் உகந்த செயலி. பேசப்படாத அல்லது கூச்சப்படக்கூடிய விஷயங்களை அழகாக கூறும் செயலி.
ஒகேசோ (Okayso)
இளம் வயது மற்றும் பதின் பருவத்தினர் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இந்த செயலி கொண்டிருக்கிறது. திருமண வாழ்க்கையில் விரைவில் அடியெடுத்து வைக்க இருப்பவர்களுக்கு இந்த செயலியில் இருக்கும் தகவல்கள் அவசியமான ஒன்று. தங்களின் எதிர்கால வாழ்க்கையை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்ள மற்றும் பார்டனின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வழிகாட்டும்.
மேலும் படிக்க | திருமண பொருத்தம் பார்க்க சரியான இணைய தளம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR