ஹேக்கர்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் திருடி உங்கள் வாட்ஸ் அப் கணக்கை முடக்கலாம் என்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர்களான லூயிஸ் மார்க்வெஸ் கார்பின்டெரோ மற்றும் எர்னஸ்டோ கேனலேஸ் பெரேனா இணைந்து ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். இப்படி உங்கள் கணக்கை மீண்டும் மீட்டெடுப்பது மிகவும் கடினம்.
பிரபலமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் தற்போது இந்த சிக்கலை எதிர் கொண்டுள்ளது, இதன் தளத்தின் மூலம் போலி செய்திகளை பரப்புவதற்கு ஹேக்கர்கள் முயற்சிக்கலாம். வாட்ஸ்அப் சேவையில் உள்ள ஓட்டைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்த பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர்களான லூயிஸ் மார்க்வெஸ் கார்பின்டெரோ மற்றும் எர்னஸ்டோ கேனலேஸ் பெரேனா இருவரும் முயற்சிக்கின்றனர்.
பயனரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர்கள் அணுகுவதும், பல மணி நேரங்களுக்கு கணக்கை முற்றிலுமாக முடக்குவதும் சாத்தியம் தான் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பயனர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும்.
Also Read | Kerala மருத்துவ மாணவர்களின் வைரல் நடன வீடியோ பின்னணி தெரியுமா?
தாக்குதல் செயல்முறை என்பது முதலில் நடக்கும் விஷயம், தாக்குபவர் ஒரு சாதனத்தில் வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பதிவிறக்கி உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு சரிபார்ப்பு பொத்தானைத் தட்டினால், உங்கள் எண்ணுக்கு சரிபார்ப்புக் குறியீடு வரும்.
உண்மையில் அந்த குறியீடுகள் இல்லாமலேயே அவர்கள் கணக்கை ஹேக் செய்ய பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள், அதாவது வேண்டுமென்று பற்பல முயற்சிகளை மேற்கொள்ளும்போது, ஒரு கட்டத்தில் அரை நாளுக்கு குறியீடுகளை நீங்கள் கோர முடியாத நிலைமை வரும் வரை உள்நுழைய முயற்சிக்கிறார்கள்.
ஹேக்கிங் செய்பவர்கள், வாட்ஸ்அப் குழுவிடம் உதவி தேவை என மின்னஞ்சல்களை அனுப்புகிறார். தனது சாதனம் திருடப்பட்டதால் இலக்கின் எண்ணை செயலிழக்கச் செய்யுமாறு கோருகிறார், பின்னர் வாட்ஸ்அப் அந்த மின்னஞ்சலை உறுதிப்படுத்த பதிலளிக்கும், அதன் பிறகு உங்கள் கணக்கு இடைநிறுத்தப்படும்.
ஆனால் உங்கள் கணக்கு செயலிழந்தது கடைசி கட்டம் வரை உங்களுக்கு தெரியாமலேயே வாட்ஸ்அப் போகலாம். தொழில்நுட்ப குறைபாட்டை வாட்ஸ்அப் எவ்வாறு சரி செய்வது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
Also Read | கொரோனாவின் அறிகுறிகளைக் குணப்படுத்தும் இவற்றைப் பற்றித் தெரியுமா?
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR