ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சில மாதங்களுக்கு முன்பு தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. பிஎஸ்என்எல் பிற நிறுவனங்களின் இந்த விலை உயர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களின் விலை உயர்ந்த பிறகு, பிஎஸ்என்எல் ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குறைந்த விலையில் அதிக நன்மைகள் என்று வரும்போது, பிஎஸ்என்எல்-இன் திட்டங்கள் மிகச் சிறந்தவையாக உள்ளன. பிஎஸ்என்எல்-இன் அத்தகைய ஒரு சிறந்த திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த திட்டத்தில் ரூ. 200 க்கும் குறைவாக 100 நாட்கள் செல்லுபடி கிடைக்கும். இது தவிர மற்ற பல நன்மைகளும் இதில் கிடைக்கின்றன. இந்த புதிய திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
பிஎஸ்என்எல்லின் ரூ.197 திட்டம்
பிஎஸ்என்எல்-இன் ரூ.197 திட்டம் வரம்பற்ற அழைப்புடன் வருகிறது. இதில், பயனர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். தரவு முடிந்ததும், 40Kbps இருக்கும். அதாவது தினசரி டேட்டா தீர்ந்த பின்னரும் இணைய வசதியை பயனர்கள் பயன்படுத்த முடியும்.
இதனுடன், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் முதல் 18 நாட்களுக்கு இந்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இன்கமிங் கால்ஸ் 100 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 100 நாட்களாகும்.
மேலும் படிக்க | BSNL தனது 4G சேவையை ‘இந்த’ நாளில் தொடங்கலாம்; கவலையில் Jio-Airtel
Zing பயன்பாட்டின் சந்தாவையும் பெறுவீர்கள்
மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், Zing பயன்பாட்டின் சந்தாவும் இந்த திட்டத்துடன் கிடைக்கும். இந்த திட்டத்தின் நன்மைகள் தீர்ந்த பிறகு, வாடிக்கையாளர்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் டாப்-அப் செய்யவும் முடியும். அதிக தரவு பயன்பாடு மற்றும் கால் செய்யும் தேவை இல்லாமல், அதிக கால்கள் மட்டும் வரும் பயனர்களுக்கு இது ஏற்ற திட்டமாக இருக்கும்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்களிலும் ரூ.200க்கும் குறைவான திட்டங்கள் உள்ளன. ஆனால் அவை அதிக செல்லுபடி காலத்தை வழங்கவில்லை. அதிக செல்லுபடி காலம் உள்ள திட்டங்கள் உங்களுக்கு தேவை என்றால், இந்தத் திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.
அதிக டேட்டா பயன்படும் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால், அதற்கான பல திட்டங்களும் பிஎஸ்என்எல்-ல் உள்ளன. பிஎஸ்என்எல்-ன் பிற நல்ல ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி மேலும் பல சமீபத்திய தகவல்களுக்கு இங்கே CLICK செய்யவும்.
மேலும் படிக்க | Jio-Airtel-Vi-க்கு தலைவலியை கொடுக்கும் மலிவான BSNL ப்ரீபெய்ட் திட்டம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR