பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.197 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 150 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இதனுடன், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் பெறுவார்கள். தொலைத்தொடர்பு துறையின் மிகவும் கவர்ச்சிகரமான திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.
பிஎஸ்என்எல்-இன் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.197 ஆக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்து வட்டங்களிலும் திட்ட நீட்டிப்புக்குள் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் பிஎஸ்என்எல் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்த சலுகையில் கிடைக்கும் 75 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி, 225GB இலவச டேட்டா
பிஎஸ்என்எல்-இன் புதிய ரூ.197 திட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசுகையில், வாடிக்கையாளர்கள் 18 நாட்கள் வேலிடிட்டியில் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்.எம்.எஸ் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். 2ஜிபி டேட்டா வரம்புக்குப் பிறகு, வேகம் 80கேபிபிஎஸ் ஆகக் குறையும். இதற்குப் பிறகும், வாடிக்கையாளர்கள் 150 நாட்களுக்கான முழு செல்லுபடி காலத்திலும் இன்கமிங்க் கால் வசதியைப் பெறுவார்கள். இருப்பினும், வாடிக்கையாளர்கள் அவுட்கோயிங்க் காலுக்கான திட்டத்தைச் சேர்க்க வேண்டும்.
நாம் மேலே கூறியது போல், தொலைத்தொடர்பு துறையின் மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாக இது கருதப்படுகிறது. ஏனெனில், இதில் கிடைக்கும் 150 நாட்களுக்கான வேலிடிட்டி மிகவும் முக்கியமாகும். பொதுவாக இதுபோன்ற திட்டங்கள் காணப்படுவதில்லை. செல்லுபடியாகும் கால அளவைப் பொறுத்தவரை, பிஎஸ்என்எல்-ன் இந்த திட்டம் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் திட்டங்களுக்கும் பெரிய போட்டியை அளிக்கின்றது.
மேலும் படிக்க | குறைந்த விலையில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் BSNL..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR