வந்துவிட்டது BSNL-ன் புதிய offer- விவரம் உள்ளே!

BSNL அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை ரூ.999/- ஆகும். ரீ-சார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும்.

Last Updated : Feb 15, 2018, 08:58 AM IST

Trending Photos

வந்துவிட்டது BSNL-ன் புதிய offer- விவரம் உள்ளே! title=

BSNL அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை ரூ.999/- ஆகும். ரீ-சார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும்.

இந்த புதிய மேக்ஸிமம் திட்டமானது என்.இ ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் தவிர அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். இந்த திட்டம் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் தரவு நன்மைகளை வழங்குகிறது. 

BSNL நிறுவனத்திடமிருந்து வெளியாகியுள்ள இந்தத் திட்டம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களுடன் கடுமையாக போட்டிபோடுகிறது. 

'மேக்ஸிமம்' திட்டத்தின் நன்மைகள் BSNL - ன் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. 

 

 

மும்பை மற்றும் டெல்லி தவிர்த்து ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. இதில் 1ஜிபி என்கிற வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

Trending News