டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா டியாகோ காரில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை ரொக்க தள்ளுபடி, பரிமாற்ற போனஸ் மற்றும் லாயல்டி தள்ளுபடி ஆகிய வடிவங்களில் பெறலாம். நிறுவனம் வழங்கும் சலுகைகளின் கீழ், வாடிக்கையாளர்கள் இதில் ரூ.28,000 வரை பெரும் சேமிப்பைப் பெறலாம். இந்த சிறப்பு சலுகை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.
சலுகை விவரங்கள் என்ன?
டாடா மோட்டார்ஸ் இந்த மாதம் டாடா டியாகோ மாடலில் ரூ.28,000 வரையிலான பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இதில், 10,000 ரூபாய் ரொக்க தள்ளுபடி, 15,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 3000 ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை இந்நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன.
இந்த ஆஃபர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். மேலும் இவை வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் டீலர்ஷிப்களில் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர, டாடா டியாகோவின் சிஎன்ஜி மாடலுக்கு நிறுவனம் எந்த தள்ளுபடியும் வழங்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Cheapest Bikes: நாட்டின் மிக மலிவான, சூப்பர் மைலேஜ் கொண்ட டாப் பைக்குகள் இவைதான்
விலை மற்றும் மைலேஜ்
டாடா டியாகோ கார் லிட்டருக்கு 20.09 கிமீ மைலேஜ் தரும். இதன் தொடக்க டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.19 லட்சம் ஆகும்.
எஞ்சின் மற்றும் வடிவமைப்பு
தற்போதுள்ள டியாகோ மற்றும் டிகோரில் நிறுவனம் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் ரெவெட்ரோன் பெட்ரோல் எஞ்சினை வழங்கியுள்ளது. இது 86 ஹார்ஸ்பவர் மற்றும் 113 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை நிறுவனம் வழங்கியுள்ளது.
டாடா டியாகோவின் நீளம் 3765 மிமீ, அகலம் 1677 மிமீ மற்றும் உயரம் 1535 மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2400 மிமீ ஆகும். இதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR