Samsung Galaxy Watch 4: சாம்சங் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான மொபைல் போன்களை வழங்கி வருகிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப சாம்சங் நிறுவனமும் பல மாற்றங்களை செய்து வருகிறது.
சாம்சங்கின் (Samsung) புதிய வளர்ச்சி ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது. Wear OS 3 இன்டர்ஃபேஸ் பொருத்தப்பட்ட Samsung Galaxy Watch 4, பொதுமக்களால் மிகவும் விரும்பப்பட்டு வருகிறது. இப்போது இதை நிறுவனம் இன்னும் மேம்படுத்தியுள்ளது. இனி இதை ஒரு வாக்கி டாக்கியாக மாற்ற முடியும். சாம்சங் இந்த அற்புதத்தை எப்படி செய்துள்ளது என்று பார்ப்போம்!
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 வாக்கி டாக்கியாக மாறும்
சாம்சங்கின் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4-ன் முன்பதிவு ஆகஸ்ட் 30 முதல் தொடங்கியது. வாடிக்கையாளர்கள் இந்த வாட்சை (Smartwatch) சந்தையில் இருந்து செப்டம்பர் 10 முதல் வாங்கலாம். இந்த வாட்ச் குறித்து மக்கள் ஏற்கனவே மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
இப்போது உற்சாகத்தை இன்னும் அதிகரிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. இப்போது பயனர்கள் சாம்சங் செயலி மூலம், கேலக்ஸி வாட்ச் 4 ஐ வாக்கி டாக்கியாகப் பயன்படுத்த முடியும்.
ALSO READ: உங்கள் கணினியை புதுமையாக்க வருகிறது Windows 11: இந்த பயனர்கள் இதை இலவசமாக பெறலாம்
இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது
சாம்சங்கின் வாக்கி-டாக்கி செயலியைப் பவிறக்கி நீங்கள் இரண்டு கேலக்ஸி வாட்ச் 4-களை வாக்கி டாக்கிகளாகப் பயன்படுத்தலாம். இதை செய்ய, முதலில் செயலியை பதிவிறக்க வேண்டும். பின்னர் இரண்டு வாட்ச்களையும் செயலியுடன் ‘பேர்’ செய்ய வேண்டும்.
செயலி மூலம், ஸ்மார்ட்போனில், வாட்ச்கள் பேர் ஆனவுடன், இது தானாக வாக்கி டாக்கியைப் போல் பணிபுரியத் தொடங்கும். இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்களிடம் கேலக்ஸி வாட்ச் 4 கண்டிப்பாக இருக்க வேண்டும். இது சாம்சங் ஸ்மார்ட்வாட்சின் பழைய மாடல்களில் வேலை செய்யாது.
இந்த அம்சம் மற்றும் வாக்கி-டாக்கி செயலி பற்றிய செய்தி வேர் ஓஎஸ் 3-யின் அறிமுகத்துக்கு முன்பே வந்தது. இது போன்ற ஒரு அம்சம் உருவாக்கப்படுகிறது என்ற பேச்சு முன்னரே இருந்தது. ஆப்பிள் (Apple) வாக்கி டாக்கி வசதியைக் கொண்டுவர முயன்றது. ஆனால் சாம்சங் போன்ற வசதியான அனுபவத்தை ஆப்பிள் நிறுவனத்தால் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 இல் உள்ள மற்ற சிறப்பம்சங்கள் என்ன?
கேலக்ஸி வாட்ச் 4 இல் பல புதிய மற்றும் தேவையான அம்சங்கள் உள்ளன. இவை இந்த வாட்சை வாங்க நல்ல காரணங்களாக அமைகின்றன. அற்புதமான பயனர் இடைமுகம், பன்முகத்தன்மை, சிறிய அளவு மற்றும் அற்புதமான அமைப்பு, நிலையான புதுப்பிப்புகள் என இந்த ஸ்மார்ட்வாட்ச் அனைத்து வித அம்சங்களையும் கொண்டுள்ளது.
ALSO READ: Samsung ஜாக்பாட் சலுகை: Samsung Galaxy S20 FE 5G போனில் ரூ. 40,000 வரை தள்ளுபடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR