Vivo X100 Series: தற்போதைய ஸ்மார்ட்போன் யுகத்தில் விலை உயர்ந்த மொபைல்களை தயாரிப்பது மற்றும் ப்ரீமியம் வகை மொபைல்களின் விற்பனையில் கொட்டிகட்டி பறக்கும் நிறுவனம் என்றால் அது ஆப்பிள்தான். ஆப்பிள் அந்த வகையில் அதன் புதிய ஐபோன் 15 சீரிஸை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன் விற்பனையும் தற்போது அனல் பறந்து வரும் சூழலில், விவோ (Vivo) நிறுவனம் அதற்கு போட்டியளிக்கும் வகையில் ஒரு மாடலை இறக்கியுள்ளது.
எப்போது அறிமுகம்?
Vivo தனது அடுத்த புதிய ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது தரமான கேமரா மற்றும் சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் கேமராவை மையமாகக் கொண்டு இந்த Vivo X100 ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதன் வெளியீட்டு தேதி குறித்தும் இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. Vivo X100 சீரிஸில் X100, X100 Pro என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. கேமரா, பேட்டரி மற்றும் சார்ஜிங் வேகம் ஆகியவை குறித்தும் பல தகவல்கள் கசிந்துள்ளன.
MediaTek அதன் சமீபத்திய முதன்மை சிப்செட், Dimensity 9300-ஐ நவம்பர் 6ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில், Dimensity 9300 மூலம் இயக்கப்படும் X100 தொடர் வரும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியாகலாம் என தகவல்கள் லீக்காகி உள்ளது.
மேலும் படிக்க | இந்த நான்கு 5ஜி போன்கள் தான் டாப்பு..! விற்பனையில் தூள் - அப்படி என்ன ஸ்பெஷல்?
லீக்கான தகவல்கள்
உத்தேசமாக, Vivo X100 சீரிஸின் வெளியீட்டு தேதிகள் நவம்பர் 13, 14, 15 ஆகிய ஏதேனும் ஒன்றில் இருக்கும் என கூறப்படுகிறது. Vivo நிறுவனத்தின் X100 சீரிஸ், ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மொபைலை போன்ற செயல்திறனைக் கொண்டிருக்கும் என்று இதுவரை அதுகுறித்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு முக்கியமான கூற்றாகும். ஏனெனில் ஐபோன் 15 ப்ரோ சக்திவாய்ந்த சிப்செட் மற்றும் சிறந்த கேமரா அமைப்பைக் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இப்போது உள்ளது.
மேலும், Vivo X100 மற்றும் X100 Pro மொபைல்கள் குறித்து வெளியாகி உள்ள சில தகவல்களைக் இங்கே காணலாம். குறிப்பாக, X100 மொபைல் Sony IMX920 முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என்றும் X100 Pro மொபைல் Sony IMX989 முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும். இரண்டு போன்களிலும் 5,000mAh விட அதிகமான பேட்டரி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Vivo X100 Pro - மேம்பட்ட மாடல்
Vivo X100 Pro மொபைல் Sony IMX989 முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என்றும் அது 50MP கேமரா என்றும் தெரிவிக்கப்படுகிறது. கூடுதலாக, இந்த மொபைலில் 48MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 12MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8MP பெரிஸ்கோபிக் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும். X100 Pro மொபைல் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை வழக்கும். இது 5,400mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
Vivo X100 - அடிப்படை மாடல்
Vivo X100 மொபைலில் Sony IMX920 முதன்மை கேமரா இருக்கும் என்பதை முன்பே பார்த்தோம். அது 50MP கேமரா என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, சாதனத்தில் 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 48MP பெரிஸ்கோபிக் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும். X100 மொபைல் 120W வயர்டு சார்ஜிங்கை கொண்டிருக்கிறது. இது 5,100mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
X100 மற்றும் 100 Pro 64MP பெரிஸ்கோப் ஜூம் கேமராவைக் கொண்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு, இரண்டு மாடல்களைத் தவிர, ஒரு பிளஸ் மாடலும் Vivo நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இதன் விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ