Google Flights: பலருக்கும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். வெளிநாடு செல்வது ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டில் நீண்ட தூரத்திற்கு செல்லவும் விமான சேவையை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், மற்ற போக்குவரத்தை விட விமான சேவை என்பது மிகவும் விலை மதிப்பானதாகும்.
நீங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, பல முறை விலை உயர்ந்த டிக்கெட்டுகளை வாங்க வேண்டியதாகிவிடும். நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், இது உங்களுக்கு சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் குறைந்த விலையில் விமான டிக்கெட் வாங்க விரும்பினால், இப்போது ஆயிரக்கணக்கான ரூபாயைச் சேமிக்கலாம்.
கூகுளின் புதிய அம்சம்
குறிப்பாக, கூகுள் சமீபத்தில் சந்தையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மலிவான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவுகிறது. விமானத்தில் பயணம் செய்பவர்கள், பல மாதங்களுக்கு முன்பே விமானங்களை முன்பதிவு செய்து கொள்வார்கள். உண்மையில் அவ்வாறு செய்வதற்கு ஒரு பெரிய காரணம் என்னவென்றால் சற்றே குறைந்த விலையில் பயணம் செய்யலாம். பயண நேரத்தில் நீங்கள் விமான முன்பதிவு செய்தால், அதன் கட்டணம் அதிகமாக இருக்கும்.
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு எங்காவது செல்ல அல்லது சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், அதன் பிறகு தற்போதைய நிலையில் இருக்கும் உயர்ந்த காட்டிலும் மிகக் குறைந்த விலையில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த புதிய அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் மலிவான விமான டிக்கெட்டுகள் எப்போது கிடைக்கும் என்பதை சரியான நேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்கும்.
மேலும் படிக்க | '100 ஜிபி டேட்டாவுடன் OTT இலவசம்' ஜியோ மற்றும் Vi-ன் சூப்பர் பிளான்கள்
கட்டணம் மாறாது
விமான டிக்கெட்டுகள் எப்போது மலிவானவை என்பதை நீங்கள் அறிய விரும்பினால், இதற்காக நீங்கள் கூகுள் ஃப்ளைட்ஸில் (Google Flights) இருக்கும் விலை கண்காணிப்பு ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும். அதன் பிறகு இந்த அம்சம் செயலில் இருக்கும் மற்றும் விமான விலைகள் குறைந்தவுடன் உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்.
இதேபோல், இப்போது விமான டிக்கெட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளது மற்றும் அதை முன்பதிவு செய்ய உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று நோட்டிபிகேசன் மூலம் உங்களுக்கு அலெர்ட் வரும். இந்த அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் Google கணக்கின் மூலம் Google Flights ஆப்பில் உள்நுழைய வேண்டும். நீங்கள் உள்நுழைந்ததும், பல Google விமானங்களில் வண்ண பேட்ஜைப் பெறுவீர்கள். அதாவது இந்த விமானத்திற்கான கட்டணம் மாறாது.
அடிக்கடி பயணம் செய்வோருக்கு...
தற்போது, மலிவான விமான முன்பதிவை வழங்குவதாகக் கூறும் இதுபோன்ற பல தளங்கள் உள்ளன, ஆனால் முன்பதிவு செயல்முறையை முடிக்கும் நேரத்தில், முதலில் காட்டப்பட்ட கட்டணத்தை விட விமானக் கட்டணம் அதிகமாகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகள் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மற்றும் விலை உயர்ந்த டிக்கெட்டுகளை மட்டும் முன்பதிவு செய்யும்படி நேரும்.
நீங்களும் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தால், இந்த அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தும், மேலும் நீங்கள் விமான கட்டணத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியதில்லை.
மேலும் படிக்க | ஆப்பிள் vs சாம்சங்: இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மொபைல் இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR