இந்திய வாகன சந்தையின் ஸ்கூட்டர் துறையில் ஹோண்டா ஆக்டிவா மூலம் வலுவான பிடியை பெற்ற பிறகு ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) மோட்டார்சைக்கிள் பிரிவிலும் பல புதிய பிராடெக்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு போட்டியாக இந்த புதிய பைக்குகள் பிரத்யேகமாக கொண்டு வரப்பட உள்ளன.
புதிய நுழைவு நிலை வாகனங்களை வெளியிட நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதுவரை நிறுவனம் சிடி110-ன் நுழைவை மட்டுமே பதிவு செய்துள்ளது. 150 சிசி செக்மென்ட்டில் பைக்குகளை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் மலிவான பைக்குகளை அறிமுகம் செய்யும்
எச்எம்எஸ்ஐ தலைவர் அசுஷி ஒகாடா கூறுகையில், “சிடி110 போன்ற மலிவான மோட்டார் சைக்கிள் எங்களிடம் உள்ளது. ஆனால் எங்கள் போட்டியுடன் ஒப்பிடுகையில் நாங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். அத்தகைய வாடிக்கையாளர்களின் தேவைக்கு நாங்கள் இன்னும் அதிகம் செய்ய வேண்டும். எனவே மலிவு விலை பைக்குகளின் பிரிவு எவ்வளவு அகலமானது என்பதைக் கண்டறிய முயற்சித்தோம். இது தொடர்பான ஆய்வு நிறைவடைந்துள்ளது. தற்போது மலிவு விலை பிரிவில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளோம்” என்றார்.
மேலும் படிக்க | அசத்தும் மஹிந்திரா நிறுவனம்: வாங்க வேண்டாம், அப்படியே ஓட்டிப்போங்க!!
Hero MotoCorp இன் வலுவான பிடி
நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மொத்தம் 42 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 56 சதவீதம் 75-110 சிசி பிரிவில் உள்ளன. இந்த பிரிவில் Hero MotoCorp இன் பங்கு அபரிமிதமானது. நான்கில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஹீரோ நிறுவனத்தினுடையதாக உள்ளன.
இந்த பிரிவில் HMSI தற்போது 3.6 சதவீத பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், ஜப்பானைச் சேர்ந்த இந்த இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் 110-125 சிசி பிரிவில் சிறந்த பிடியைப் பெற்றுள்ளனர். 2022 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரை இந்த பிரிவில் நிறுவனம் சுமார் 9.25 லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் ஆதிக்கம் செலுத்துகிறது. நிறுவனம் 48 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | கன்னாபின்னாவென விற்கும் எலக்ட்ரிக் வாகனங்கள்: மிரள வைக்கும் வளர்ச்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR