HAL நிறுவனத்திற்கு, அதிநவீன ஆயுதங்களுடன் தேஜஸ் விமானம் தயாரிக்க அனுமதியளிக்கபட்டுள்ளது...
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், அதிநவீன ஆயுதங்களுடன், 'தேஜஸ்' இலகுரக போர் விமானம் தயாரிக்க, எச்.ஏ.எல். எனப்படும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேஜஸ் விமானத்தை தயாரித்து வந்த இந்நிறுவனத்திற்கு ரபேல் போர் விமானம் தயாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், அதி நவீன ஆயுதங்களுடன் கூடிய விமானமாக தேஜசை மாற்றி அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி, எச்.ஏ.எல்.லுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாற்றி வடிவமைக்கப்பட்ட முதல் விமானம் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.