Google Payஐப் பயன்படுத்தி FASTagஐ ரீசார்ஜ் செய்வது எப்படி?

கூகுள் பே- செயலியில் இருந்து FASTagஐ ரீசார்ஜ் செய்வது சுலபமானது. அதற்கான சுலபமான வழிகாட்டுதல்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2022, 03:07 PM IST
  • சுலபமாக FASTagஐ ரீசார்ஜ் செய்யலாம்
  • கூகுள் பே மூலம் ஃபாஸ்டேஹ் ரீசார்ஜ்
  • ஃபாஸ்டேஹ் ரீசார்ஜ் சுலபமான வழிமுறைகள்
Google Payஐப் பயன்படுத்தி FASTagஐ ரீசார்ஜ் செய்வது எப்படி? title=

Google Payஐப் பயன்படுத்தி FASTagஐ ரீசார்ஜ் செய்வது மிகவும் சுலபமானது. கூகுள் பே- செயலியில் இருந்து FASTagஐ ரீசார்ஜ் செய்ய, Google Pay FASTag கணக்கைப் பயன்படுத்த வேண்டும், அது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்துடன் (UPI) இணைக்கப்படும்.

FASTag என்பது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இயக்கப்படும் மின்னணு கட்டண வசூல் அமைப்பாகும். இது ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது, இதன் மூலம் டோல் பிளாக்கில் டோல் வரியை சுலபமாக செலுத்தலாம்.  

Google Pay மூலம் FASTag கணக்கை ரீசார்ஜ் செய்ய, இரண்டையும் இணைப்பது அவசியம். இதற்கு முதலில், நீங்கள் Google Pay ஆப்ஸின் "பில் பேமெண்ட்ஸ்" பகுதிக்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் FASTag ரீசார்ஜ் செய்யும் தெரிவு காணப்படும். இதற்குப் பிறகு, FASTag ரீசார்ஜ் செய்வதற்கு, உங்கள் Google Pay செயலியில் இருக்கும் வங்கிக் கணக்குகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  

மேலும் படிக்க | GPay, PhonePe-வை காலி செய்ய திட்டம்போடும் TATA

 உங்கள் FASTag கணக்கை கூகுள் பே மூலம் செலுத்தும் வழிமுறை  

STEP 1: முதலில், FASTag கணக்கை இணைக்க வேண்டும்

STEP 2: உங்கள் Android அல்லது iPhone இல் Google Pay செயலியை (Google Pay app) திறக்கவும்.

STEP 3: இப்போது புதிய கட்டண பொத்தானைக் கிளிக் செய்யவும்.

STEP 4: இதற்குப் பிறகு, தேடல் பட்டியில் "FASTag" ஐத் தேர்ந்தெடுக்கவும்.

STEP 5: உங்கள் FASTag வழங்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

STEP 6: இப்போது 'ஸ்டார்ட்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

TECH

STEP 7: இப்போது, ​​நீங்கள் உங்கள் வாகன எண்ணை உள்ளிட்டு கணக்கிற்கு பெயரிட வேண்டும். எடுத்துக்காட்டாக, “எனது கார்” அல்லது உங்கள் கார் மாடலின் பெயரையும் பயன்படுத்தலாம்.

STEP 8: இப்போது திரையின் கீழே உள்ள இணைப்பு கணக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

STEP 9: இதற்குப் பிறகு, உங்கள் கணக்கை மதிப்பாய்வு செய்ய வேண்டும், அதில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் வாகன எண் போன்றவை இருக்கும்.

STEP 10: மதிப்பாய்வு செய்த பிறகு, இணைப்பு கணக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும். குறைந்தபட்சம் ரூ.200 செலுத்துவதற்கு இப்போது Pay என்ற பட்டனைத் தட்டவும்.

STEP 11: இப்போது டிக் என்பதைக் கிளிக் செய்யவும்.

STEP 12: பின்னர் திரையின் அடிப்பகுதியில் உள்ள பணம் செலுத்து பொத்தானைக் கிளிக் செய்யவும்.

STEP 13: இப்போது, ​​Google Pay ஆப்ஸ், உங்கள் UPI பின்னை உள்ளிடக் கோரும். அதை உள்ளிட்டு, சரிபார்த்த பிறகு, உங்கள் கட்டணம் செலுத்தப்படும்.

STEP 14: பணம் செலுத்திய பிறகு, Google Pay உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து SMS செய்தி வந்துவிடும்.

மேலும் படிக்க |  EPFO அளிக்கும் அசத்தல் வாய்ப்பு: இதில் பதிவு செய்தால் லாபம் காணலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News