நீண்ட நாட்களுக்கு கொத்துமல்லியை பிரெஷ்ஷாக வைத்திருக்க... இந்த டிப்ஸ்கள் கை கொடுக்கும்

Kitchen Hacks: பச்சை கொத்தமல்லி எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது என்பதை மறுக்க இயலாது. ஆனால், எளிதில் கெட்டு விடும் தனமை கொண்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2024, 05:48 PM IST
  • கொத்தமல்லி இலைகள் பழுத்து மஞ்சள் நிறமாகி விடும் அல்லது இலைகள் அழுகி விடும்.
  • நீண்ட காலத்திற்கு கொத்துமல்லியை பிரெஷ்ஷாக வைத்திருக்க...
  • பச்சை கொத்தமல்லி எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது என்பதை மறுக்க இயலாது.
நீண்ட நாட்களுக்கு கொத்துமல்லியை பிரெஷ்ஷாக வைத்திருக்க... இந்த டிப்ஸ்கள் கை கொடுக்கும் title=

Kitchen Hacks:கொத்தமல்லி அனைத்து வகை சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது . பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இந்த கொத்தமல்லி சிறுநீரக நச்சுக்களை நீக்க, கொல்ஸ்ட்ராலை எரிக்க என, உடல் பருமை குறைக்க என ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

பச்சை கொத்தமல்லி எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது என்பதை மறுக்க இயலாது. ஆனால், எளிதில் கெட்டு விடும் தனமை கொண்டது. அதன் இலைகள் பழுத்து மஞ்சள் நிறமாகி விடும் அல்லது கொத்தமல்லி இலைகள் அழுகி விடும். பச்சை கொத்தமல்லி இலைகளை ப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்வதில் பிரச்சனைகளை சந்தித்தால்,  இந்த செய்ஹி உங்களுக்குத் தான். இங்கே கொடுக்கப்பட்டுள்ள, டிப்ஸ் மூலம்,  நீண்ட காலத்திற்கு கொத்துமல்லியை பிரெஷ்ஷாக வைத்திருக்கலாம்.

கொத்தமல்லியை ஃப்ரெஷ்ஷாக வைக்க டிப்ஸ்

1. கொத்துமல்லியை காற்று புகாத டப்பாவில் முதலில் டிஷ்யூ பேப்பரை போட்டு, பின் அதன் மீது கொத்துமல்லையினை வைத்து மூடவும். இதன் மூலம் 10 நாட்களுக்கு பிரெஷ்ஷாக இருக்கும். குளிர்சாதன பெட்டியில் காற்று புகாத டப்பாவில் கொத்தமல்லி இலைகளை சேமித்து வைப்பதன் மூலம், அவை நீண்ட நேரம் புதியதாக இருக்கும், விரைவில் கெட்டுப்போகாது.

2. கொத்தமல்லி இலைகளை மஞ்சள் நீரில் தோய்த்து வைத்துக்கொள்வது நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக இருக்கும். கொத்தமல்லியை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்யவும். அதன் பிறகு, கொத்தமல்லி இலைகளின் தண்டுகளை வெட்டி, இலைகளை மஞ்சள் கலந்த நீரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, கொத்தமல்லியை எடுத்து உலர வைக்கவும். 

3. கொத்தமல்லியை மஸ்லின் துணியால் போர்த்தி அல்லது க்ளிங் ராப்பில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்தால், குறைந்தது ஒரு வாரமாவது பிரெஷ்ஷாக இருக்கும்.

4. கொத்தமல்லி தண்டினை தண்ணீரில் வைப்பதும் நீண்ட காலம் பிரெஷ்ஷாக வைத்திருக்க உதவும். கொத்தமல்லி வேர்களை அரை கிளாஸ் தண்ணீரில் வைக்கவும். இதற்குப் பிறகு, ஒவ்வொரு 3-4 நாட்களுக்கும் இந்த தண்ணீரை மாற்றி வைக்கவும்.

5. கொத்தமல்லியை பிரீஸரில் உறைய வைப்பதன் மூலமும் பிரெஷ்ஷாக வைத்திருக்கலாம். இதற்கு கொத்தமல்லியை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். இதற்குப் பிறகு, இந்த வெட்டப்பட்ட கொத்தமல்லி இலைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்து ஃப்ரீசரில் வைக்கவும்.

மேலும் படிக்க | 40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க... இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க

கொத்தமல்லியின் ஆரோக்கிய  நன்மைகள்:

1. கொத்தமல்லி தழையை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

2. கொத்தமல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருந்து நச்சுக்களையும் அழுக்குகளையும் அகற்ற உதவும்.

3.  கொத்தமல்லியில் நிறைந்துள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது.

4. கொத்தமல்லி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்கவும் உதவும்.

5. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கொத்தமல்லி  மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும் ஓமம்: இப்படி உட்கொண்டால் அதிக பயன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News