iPhone 16 vs iPhone 15: ஆப்பிள் இன்று தனது புதிய ஐபோனை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த நிகழ்வு செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெறும். ஆப்பிள் புதிய ஐபோனுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் ஆப்பிள் வாட்ச் SE ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.
எனினும் மற்ற அறிமுகங்களை விட அதிக கவனம் ஐபோன் 16 போன் மீது தான் இருக்கும். இந்த புதிய போனில் ஆப்பிள் என்ன சிறப்பு அம்சங்களை கொண்டு வரவுள்ளது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். புதிய போன் ஐபோன் 15 போனுடன் ஒப்பிடுகையில் எந்த வகையில் மாறுபட்டதாக இருக்கும் என்பது பற்றி சில யூகங்கள் கசிந்துள்ளன.
iPhone 16 Vs iPhone 15
டிஸ்ப்ளே
iPhone 16 Pro மற்றும் Pro Max வடிவமைப்பு கிட்டத்தட்ட iPhone 15 Pro போலவே இருக்கும். ஆனால் இந்த புதிய போன்களில் திரை பெரிதாக இருக்கும். ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. சிறந்த தோற்றத்தை கொடுக்கும் வகையில், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விளிம்புகளும் மிகவும் மெல்லியதாக இருக்கும்.
புதிய சிப்
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 க்கு இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் அதில் இருக்கும் சிப். ஐபோன் 16 போனில் ஆப்பிளின் புதிய ஏ18 சிப்பைக் கொண்டிருக்கும். இது ஐபோன் 15 சிப்பை விட மிகச் சிறந்த செயல் திறனைக் கொண்டது. இந்த சிப்பின் உதவியுடன் போனில் உள்ள AIயும் சிறப்பாக செயல்படும். ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற அம்சமும் இருக்கும். அதில் சிரி மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்கள் இருக்கும். இந்த சிப்பை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் டிஎஸ்எம்சி என்ற நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. இது போனின் செயல்பாடு மற்றும் பேட்டரியின் ஆயுள் இரண்டையும் மேம்படுத்தும்.
மேலும் படிக்க | உங்கள் வேலையை எளிதாக்கும்... சில முக்கிய Gmail அம்சங்கள்
கேமரா
ஐபோன் 16 போனில் மேம்படுத்தப்பட்ட கேமரா இருக்கும். iPhone 15 ஐ விட சிறந்த, 48MP அல்ட்ரா-வைட் கேமரா இருக்கும். இந்த கேமராவை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல படங்களை எடுக்கலாம். இது தவிர, ஐபோன் 16 ஒரு புதிய பொத்தான் இருக்கும் எனவும் இது கேமராவின் ஷட்டர் போல வேலை செய்யும் எனவும் கூறப்படுகிறது.
போன் வடிவமைப்பு
வடிவமைப்பில் ஐபோன் 16 நிச்சயம் மாற்றத்தை கொண்டிருக்கும். இந்த நேரத்தில், ஐபோன் 16 மற்றும் 16 பிளஸின் பின்புறத்தில் உள்ள கேமராக்கள் நிமிர்ந்த நிலையில் இருக்கும், முன்பு அவை சாய்ந்த நிலையில் இருந்தன. தற்போது iPhone 15 Proவில் மட்டுமே இப்படி உள்ளது. iPhone 16ல் சிறப்பு வீடியோ பதிவு அம்சத்தில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தவிர, ஐபோன் 16 புதிய ஆக்ஷன் பட்டன் இருக்கும் என கூறப்படுகிறது இது முன்பு ஐபோன் 15 ப்ரோவில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி
ஐபோன் 15 மாடலை விட ஐபோன் 16 போன்களில் பேட்டரியும் சிறப்பாக இருக்கும். இந்த போனில் அதிக நேரம் நீடிக்கும் புதிய வகை பேட்டரி இருக்கும். போன் அதிக தடிமனாக இருக்காது. இந்த போனை சார்ஜ் செய்யும் வேகமும் அதிகரிக்கும். இந்த ஃபோனை வேகமாக சார்ஜ் செய்ய 40W சார்ஜர் மற்றும் 20W MagSafe சார்ஜர் கிடைக்கும். இவை இரண்டும் மிக வேகமாக சார்ஜிங் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ