IRCTC (இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்) இணைய தளம் (irctc.co.in) ஆனது இனி Windows XP மற்றும் Windows Server 2003 இயங்குதளங்களில் செயல்படாது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது!
நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப IRCTC-யும் தனது வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் தனது வலைதளத்தினை மேம்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது IRCTC தளத்தினை புதிய பொளிவுடன் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த புதுதளம் Windows XP மற்றும் Windows Server 2003 இயங்குதளங்களில் செயல்படாது என்பதால், வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் இந்த Windows XP மற்றும் Windows Server 2003 இயங்குதளங்கள் பயன்பாட்டில் இல்லை என்ற போதிலும், சில அரசு அலுவலகங்களில் Windows XP இயங்குதளம் கொண்ட கணினிகள் செயல்பாட்டில் தான் உள்ளன. எனவே இந்த கணினிகளில் இனி IRCTC தளத்தினை பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள இந்தியன் இரயில்வே, அதேவேலையில் IRCTC-ன் விமான சேவை செயலியின் மூலம் பயணசீட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான காப்பீட்டு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீட்டு திட்டமானது உள்நாடு, வெளிநாடு ஆகிய இரு வழி சேவைகளுக்கும் பொருந்தும் என IRCTC தெரிவித்துள்ளது.
இந்த புதிய காப்பீட்டு திட்டத்தினை, IRCTC மற்றும் Bharti AXA General Insurance இணைந்து வழங்குவதாக தெரிகிறது.
இதற்கிடையில் கடந்த திங்கள் அன்று மும்பையில் IRCTC ஆனது தனது முதல் தானியங்கி pizza விநியோக இயந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்திய ரயில்வே துறையினை தொழில்நுட்ப பாதையில் கொண்டுச்செல்லும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. எனினும் வரும் பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து, மத்திய அமைச்சகம் புதிய திட்டங்கை செயல்படுத்தி வருகிறது என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.