ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, எந்த விலையில் தேடினாலும் ஒரு ரீச்சார்ஜ் பிளான் இருக்கும். அதேபோல் வேலிடிட்டி ஒரு மாதம் முதலே பல திட்டங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் கையில் தான் இருக்கிறது, எந்த திட்டம் வேண்டும் என தேடி எடுத்துக் கொள்வது. சிலருக்கு ஒரு மாதம் மட்டும் டேட்டா வேண்டும், வாய்ஸ்கால் ஆப்சன் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். சிலர் 50 ரூபாயில் ஒரு திட்டம் இருந்தால் கூட பரவாயில்லை என நினைப்பார்கள். அத்தகைய நபர்களுக்காகவே ஜியோ கொண்டு வந்திருக்கிறது ஒரு நாள் வேலிடிட்டியில் 49 ரூபாய் ரீச்சார்ஜ் பிளான். இந்த பிளான் பேஸிக் பிளான்களில் ஒன்றாக ஜியோ வைத்திருக்கிறது.
மேலும் படிக்க | இந்தியாவில் BMW எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அடடே இவ்வளவு அம்சம் இருக்கா... விலை என்ன?
தினசரி அதிகம் டேட்டா பயன்படுத்துபவர்கள் இந்த பிளானை பயன்படுத்திக் கொள்ளலாம். ப்ரீப்பெய்ட் யூசர்களுக்காகவே ஜியோ கொண்டு வந்திருக்கும் இந்த பிளானின் விலை 49 ரூபாய் மட்டுமே. 25 ஜிபி டேட்டா கிடைக்கும். டி20 உலக கோப்பை தொடர் நடந்து கொண்டிருப்பதால், அதனை பார்த்து ரசிக்க பிரத்யேகமாக இந்த பிளானை ரசிகர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த பிளான் ஏர்டெல் நிறுவனத்துக்கு பெரும் அடியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால், இதே விலையில் டேட்டா வழங்கும் ஏர்டெல், ஜியோவை விட குறைவான டேட்டாவையே கொடுக்கிறது. ஏர்டெல் ரூ.49க்கான டேட்டா திட்டம் 20 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது ஜியோவின் டேட்டா திட்டத்தை விட 5 ஜிபி குறைவு.
இதுதவிர, டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக ஜியோ பல திட்டங்களை வழங்குகிறது. இதில் ஒரு திட்டம் ரூ.749க்கு வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள். இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 20 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல், ஜியோவில் சில டேட்டா பூஸ்டர் பிளான்களும் இருக்கின்றன. 25 ரூபாய் முதல் பல்வேறு விலை வரிசைப் பட்டியலில் டேட்டா பூஸ்டர் பிளான்கள் இருக்கின்றன. இது முழுக்க முழுக்க டேட்டா பிளான் மட்டுமே. கூடுதலாக டேட்டா பயன்படுத்துபவர்கள் இந்த திட்டங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உலக கோப்பை முதல் யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியற்றை 24 மணி நேரமும் தங்கு தடையில்லாமல் பார்த்து ரசிக்கலாம்.
கிரிக்கெட் பிளான் வேண்டும் என்றால் ஜியோவில் 148 ரூபாய்க்கு 10ஜிபி 28 நாட்களுக்கும், 331 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கும் கிடைக்கும். இதேபோல், 181 ரூபாய்க்கு 30 ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. 241 ரூபாய் பிளானில் 40ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது.
மேலும் படிக்க | மே 2024: அதிகம் விற்பனையான டாப் 8 ஸ்கூட்டிகள்... முதலிடம் எதற்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ