இப்போதெல்லாம், ஐபோன் பெயரில் ஒரு பெரிய மோசடி நடந்து வருகிறது. உலகின் முன்னணி பிராண்டு மொபைல் என்பதால் அதன் மீதான மோகம் என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிகம். அதிலும் மிகவும் காஸ்டிலியான மொபைலாகவும் ஐபோன் இருக்கிறது. இதனால் இந்த மொபைல் வாங்குவது என்பது பலருக்கும் வாழ்நாள் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. இதுதான் மோசடி கும்பலுக்கு இருக்கும் ஒரு வாய்ப்பு. அதாவது காஸ்டிலியான ஐபோன் வாங்க முடியாதவர்களை, குறைவான விலையில் ஐபோன் கிடைக்கும் என நம்பவைக்க முடியும் அல்லவா?.
மேலும் படிக்க | Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம்
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல மோசடி கும்பல் ஐபோன் போல போலி மொபைல்களை உருவாக்கி ஐபோன் எனக் கூறி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்கின்றனர். அதிகவிலை ஐபோனைக் காட்டிலும் குறைவான விலையில் கிடைக்கும் மொபைல் என்பதால் தாங்களும் ஐபோன் வாங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் சிலர் இந்த போலி ஐபோனுக்கு இரையாகிவிடுகின்றனர். அந்தவகையில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?. சில டிப்ஸ்கள் மூலம் உங்கள் ஐபோனின் உண்மை தன்மையை கண்டுபிடித்துவிடலாம்.
ஐபோன் எப்போதும் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அதன் மேற்புற அமைப்புகள் எல்லாம் குவாலிட்டியாக இருக்கும். இந்த அடையாளம்கூட ஐபோனை மற்ற மொபைல்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும். மேலும், ஐபோன் கேபிள் தரமாகவும், சன்னமாகவும் இருக்கும். உண்மையான ஐபோன் கேபிளை பார்த்தவர்கள் போலி கேபிளை எளிமையாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஐபோன் மேற்புற விளிம்புகளை உருவாக்குவது மிகவும் கடினம். ஐபோன் போல் போலிகளை உருவாக்குபவர்களால் ஐபோன் மொபைலில் இருக்கும் மேற்புற விளிம்புகளை அப்படியே கொடுக்க முடியாது. ஐபோன் பில்ட் குவாலிட்டியை நீங்கள் சரிபார்த்தால், நிச்சயமாக போலி ஐபோன்களை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ