Lenovo-க்கு சொந்தமான ஸ்மார்ட்போன் பிராண்டான மோடோரோலா சமீபத்தில் Moto G Stylus 2022 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 90Hz புதுப்பிப்பு வீதம், 5000mAh பேட்டரி, 6.8-இன்ச் LCD டிஸ்ப்ளே மற்றும் பலவகை அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ட்விலைட் ப்ளூ மற்றும் மெட்டாலிக் ரோஸ் நிறத்தில் வருகிறது. இது ஒரு ஒற்றை 6/128ஜிபி டிரிமில் கிடைக்கிறது. இதன் ரீடெயில் விலை $299 (சுமார் ரூ. 22,332) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"மோட்டோரோலா (Motorola) யுஎஸ், பிப்ரவரி 17 ஷிப் டேட்டாக இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகின்றது. ப்ரீ-ஆர்டர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டன என GSMArena தெரிவித்துள்ளது. விவரக்குறிப்புகளின் அடிப்படையில், Moto G Stylus (2022) ஆனது 6.8 இன்ச் முழு HD IPS LCD பேனலைக் கொண்டுள்ளது. இதன் ரிசல்யூஷன் 2460A-1080 ஆகும். இது 90Hz புதுப்பிப்பு வீதத்தையும் கொண்டுள்ளது" என்று செய்தி நிறுவனம் IANS தெரிவித்துள்ளது.
Motorola Moto G Stylus 2022 ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட MediaTek Helio G88, எட்டு கோர்கள் கொண்ட 64-பிட் SoC மற்றும் Mali-G52 GPU ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. இதன் மென்பொருள் ஆண்ட்ராய்டு 11 மூலம் மோட்டோவின் மை யுஎக்ஸ் இடைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ALSO READ | Oppo Reno7 சீரிஸின் அட்டகாசமான இரண்டு புதிய வரவுகள்!
இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி ஷூட்டர், 8எம்பி அல்ட்ரா-வைட் (மேக்ரோ போட்டோகிராபிக்கும் பயன்படுத்தப்படலாம்) மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. இது 5,000 mAh பேட்டரி, 6ஜிபி வரை ரேம், 128ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவாக்கலாம்.
Motorola சமீபத்தில் Moto G71 5G ஐ அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 695 5G செயலியுடன் 13 5G பேண்டுகள், ஒரு பெரிய 5,000mAh பேட்டரி, மொபைலுக்கான திங்க்ஷீல்ட் மற்றும் இன்னும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை 18,999 ரூபாய். Moto G71 5G ஆனது 6GB RAM மற்றும் 128GB உடனும் கிடைக்கிறது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) 409 PPI உடன் 6.4-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே மற்றும் 700 nits வரையிலான பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தெளிவான படங்களும் சிறந்த பிரகாசமும் கிடைக்கும்.
Moto G71 5G ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது f/1.8 லென்ஸுடன் 50MP பிரைமரி சென்சார் மற்றும் f/2.2 அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டரைக் கொண்ட 8MP இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இது வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கான 16MP முன் கேமரா சென்சார் உடன் வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR