Nokia C20 Plus: வெறும் ரூ.8000-ல் அறிமுகம் ஆனது அட்டகாச ஸ்மார்ட்போன்

இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, Nokia C20 Plus ஏப்ரல் மாதம் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 11, 2021, 09:25 PM IST
  • நோக்கியா நிறுவனம் தனது Nokia C20 Plus-ஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
  • Nokia C20 Plus ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவுடன் கிடைக்கிறது.
  • இந்த தொலைபேசி ஓஷன் ப்ளூ மற்றும் கிராஃபைட் பிளாக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
Nokia C20 Plus: வெறும் ரூ.8000-ல் அறிமுகம் ஆனது அட்டகாச ஸ்மார்ட்போன் title=

Nokia C20 Plus: நோக்கியா நிறுவனம் தனது Nokia C20 Plus-ஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக Nokia C20 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொலைபேசி வாட்டர் டிராப் நாட்ச் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் செல்பி கேமரா நிறுவப்பட்டுள்ளது. இது தவிர, Nokia C20 Plus தொலைபேசியில் பெரிய பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 கோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹேண்ட்செட் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, Unisoc SC9863A செயலி, 32GB eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இது ஆண்ட்ராய்டு 11-ல் (Go Edition) இயங்குகிறது.

Nokia C20 Plus-ன் விலை

இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் (Smartphone) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, Nokia C20 Plus ஏப்ரல் மாதம் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. Nokia C20 Plus ஸ்மார்ட்போனின் விலை RMB 699 (தோராயமாக ரூ .7,990) ஆகும். இந்த தொலைபேசி ஓஷன் ப்ளூ மற்றும் கிராஃபைட் பிளாக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இருப்பினும், இந்தியாவில் இந்த தொலைபேசியின் அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

Nokia C20 Plus-ன் விவரக்குறிப்புகள்

Nokia C20 Plus ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவுடன் கிடைக்கிறது. இது 720x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன், வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 20: 9 ஆஸ்பெக்ட் விகிதத்துடன் வருகிறது. தொலைபேசியில் ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி 9863 ஏ செயலி உள்ளது.  இது ஐஎம்ஜி 8322 ஜி.பீ.யுடன் வருகிறது. இந்த தொலைபேசி 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் இதன் ஸ்டோரேஜை 256 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

ALSO READ: அசத்தல் அம்சங்கள், அதிரடி விலையில் அறிமுகமாகவுள்ளன Nokia G10, G20: முழு விவரம் இதோ

இந்த தொலைபேசி Android 11 (Go Edition) இல் இயங்குகிறது. அதன் பவர் வசதிக்காக 4950 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது, இதில் 8MP முதன்மை சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சாரும் உள்ளது. இதனுடன், எல்.ஈ.டி ஃபிளாஷ் உள்ளது. 

நிறுவனம், முன்பக்கத்தில் 5 எம்பி சென்சாரை அளித்துள்ளது. இது செல்பி மற்றும் வீடியோ சேட்டிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பிற்கு, தொலைபேசியில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் உள்ளன. இதன் எடை 204.7 கிராம் ஆகும். இந்தியாவில் இந்த தொலைபேசி அறிமுகம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ALSO READ: Phone under Rs 1500: ஜியோவுக்கு போட்டியாக வரும் சாம்சங், நோக்கியா, மைக்ரோமேக்ஸ் போன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News