Ola Electric Scooter: வாகன ஓட்டிகளின் சமீபத்திய தேர்வாக மின்சார வாகனங்கள் மாறி வருகின்றன. பெட்ரோல் டீசல் விலையில் அதிக அளவு அதிகரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மின்சார வாகனங்கள் ஒரு நல்ல மாற்றாக இருந்து வருகின்றன. அதன்படி ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஓலா மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தியை தொடங்கி உள்ளது.
மின்சார ஸ்கூட்டர்களில் ஓலா மின்சார ஸ்கூட்டர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி இதற்கான முன்பதிவு தொடங்கிய முதல் நாலே ஒரு லட்சம் முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்தது ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம்.
ALSO READ: Ola Electric Scooter: 10 அழகிய வண்ணங்களில் கலக்க வருகின்றன ஓலா ஸ்கூட்டர்கள்!!
இதற்கிடையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் நெருங்கி வரும் நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிறது. அந்தவகையில் இந்த இ-ஸ்கூட்டருக்கு வழங்கவுள்ள 10 நிறத்தேர்வுகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த வாரத்தில் வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் தற்போது, தங்களது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடை எந்த அளவில் எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டு மீண்டும் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இதில் 80kmph, 90kmph மற்றும் 100kmph-க்கு குறைவாக என்ற தேர்வுகளை வழங்கியுள்ளார்.
What top speed would you want for the Ola Scooter?
— Bhavish Aggarwal (@bhash) July 24, 2021
அதன்படி பாவிஷ் அகர்வாலின் இந்த கருத்துக்கணிப்பு டுவிட்டர் பதிவில் இருந்து, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு குறைந்தப்பட்சம் 80kmph அளவிலாவது கொண்டுவரப்படும் என்பது தெரிய வருகிறது.மேலும், ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் வழங்கப்படுவதை போன்று ஸ்கூட்டரின் வேகத்தை தீர்மானிக்கும் டிரைவிங் மோட்கள், ஓலா இ-ஸ்கூட்டரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) முழு சார்ஜில் சுமார் 150 கி.மீ தூரத்தை கடக்கும் என்று கூறப்படுகிறது. 18 நிமிடங்கள் சார்ஜ் செய்யப்பட்டால், இந்த ஸ்கூட்டரால் 75 கி.மீ வரை செல்ல முடியும். எனினும், இந்த ஸ்கூட்டர் சாலைகளில் ஓடத் துவங்கியவுடன்தான் முழுமையான தகவல்கள் கிடைக்கும்.
ஸ்கூட்டருக்கு Series S என்று பெயரிடப்படும் என்றும், இதன் விலை ரூ .1.2 லட்சம் மற்றும் ரூ .1.4 லட்சம் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: Ola Electric Scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR