OnePlus 10 Pro மொபைலின் டீசர் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து இந்த மொபைல் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்த உறுதியான தகவல் வெளிவராத நிலையில் அதிகாரபூர்வமான வகையில் தோற்றமளிக்கும் டீசர் மூலம் ஜனவரி 11 அன்று வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.
ALSO READ | வெறும் 5 ஆயிரத்திற்கு Vivo 5G Smartphone வாங்க அறிய வாய்ப்பு
இந்த OnePlus 10 Pro மொபைலானது குவால்காம் ஸ்னாப்டிராகன்(Qualcomm Snapdragon) 8 ஜெனரல் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்கும் என்று செய்திகள் கூறப்படுகிறது. 3C சான்றிதழின்படி OnePlus 10 Pro-வின் மாடல் எண் NE2210 11V-ல் 7.3 ampere-ஐ கொண்டுள்ளது. இதில் 80W அட்டகாசமான சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இதுவரையில் சார்ஜிங் வசதி 65W என்று இருந்த நிலையில் தற்போது 80W அதிவேக சார்ஜுடன் களமிறங்கியுள்ளது.
OnePlus 10 Pro teaser leaked online pic.twitter.com/V54SZ0gzxD
— RJ RaJa (@rajaduraikannan) January 3, 2022
சமீபத்திய அறிக்கையின்படி, இந்த மொபைல் 2k ரிசலியூஷனுடன், 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் ஸ்க்ரீன் இருபுறமும் வளைந்தபடி காணப்படுகிறது. இதன் மேல்பக்க இடது மூலையில் hole-punch cutout உள்ளது. மேலும் இதன் பேட்டரி 5,000mAh என்ற அளவில் உள்ளது, இவை 50W ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் இயங்குகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன்(Qualcomm Snapdragon) 8 ஜெனரல் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த மொபைலானது LPDDR5 RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. 4 கேமராக்களை கொண்டுள்ள இந்த மொபைலில் பின்புறம் hasselblad வகை கேமரா பயன்பாடு உள்ளது. முதல்நிலை கேமரா 48MP என்ற அளவிலும், இரண்டாம் நிலை கேமரா 50MP என்ற அளவிலும், மூன்றாம் நிலை கேமரா 8MP என்ற அளவிலும், முன்பக்க செல்ஃபி கேமரா 32MP என்ற அளவிலும் உள்ளது.
ALSO READ | Apple இன் Surgical Strike ! Xiaomi, Vivo மற்றும் OPPO க்கு ஆப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR