Union Budget 2025: இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். வழக்கத்தை போலவே, இந்த முறையும் பட்ஜெட் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. வரி விலக்குகள், வரி வரம்பில் மாற்றம் ஆகியவற்றுக்காக வரி செலுத்துவோர் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்
இந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு பல நல்ல செய்திகள் எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை தொடர்பான இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. புதிய வரி முறையில் நிவாரணம் அளித்து, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம் அளிக்கும் திட்டம் உள்ளது. மேலும், மக்களிடம் உள்ள ரொக்கத்தை அதிகரித்து, அதன் மூலம் அவர்களின் செலவுத் திறனை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது.
Income Tax Exemption: வருமான வரி விலக்கு
வருமான வரி விலக்கில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யலாம் என கூறப்படுகின்றது. எனினும், இந்த விலக்கு புதிய வரி முறையில் மட்டுமே கிடைக்கும். புதிய வரி முறையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, விலக்குகளின் வரம்பை அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. முதலாவதாக, நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷனில் நிவாரணம் கிடைக்கலாம். இரண்டாவதாக ரூ.15-20 லட்சம் வரி வரம்பில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைக்கலாம்.
New Tax Regime: புதிய வரி முறை
புதிய வரி முறையில் வரி செலுத்துவோர் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? முழுமையான அலசலை இங்கே காணலாம்.
Standard Deduction: நிலையான விலக்கின் வரம்பு அதிகரிக்குமா?
புதிய வரி முறையில் (New Tax Regime) தற்போதைய நிலையான விலக்கு வரம்பு ரூ.75,000 ஆக உள்ளது. அரசாங்கம் இந்த வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பட்ஜெட்டிலும், அரசாங்கம் நிலையான விலக்குக்கான வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தியது. இது மேலும் உயர்த்தப்பட்டால், வரி செலுத்துவோருக்கு தங்கள் வருமானத்தில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை வரியில்லா வருமானமாக்க வாய்ப்பு கிடைக்கும். இது அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமான அளவை குறைக்கும். இதன் மூலம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவரும் நேரடிப் பயனைப் பெறுவார்கள். இது வரி செலுத்துவோரின் கைகளில் அதிக பணத்தை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tax Slab: 20% வரி அடுக்கின் வரம்பு அதிகரிக்குமா?
புதிய வரி முறையில் அரசாங்கம் 20% வரி அடுக்கின் வரம்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது இரண்டாவது பெரிய நல்ல செய்தியாக பார்க்கப்படுகின்றது. இதுவரை, 12-15 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அதை ரூ.20 லட்சம் வருமானமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இந்த மாற்றம் வந்தால், அது குறிப்பாக ரூ.15-20 லட்சத்திற்கு இடைப்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். இந்த மாற்றம் நடுத்தர மற்றும் உயர் வருமானக் குழுவில் உள்ள வரி செலுத்துவோருக்கு மிகவும் பயனளிக்கும். ஏனெனில் இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டால், இவர்கள் முன்பை விட குறைவாக வரி செலுத்தினால் போதும்.
பிரதமர் அலுவலகம் இறுதி முடிவை எடுக்கும்
2025 பட்ஜெட்டில் வரி தொடர்பான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், இறுதி முடிவை பிரதமர் அலுவலகம்தான் எடுக்கும். இது குறித்து நிதி அமைச்சகத்தால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழைய வரி முறையை திரும்பப் பெற, புதிய வரி முறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவது அவசியம் என்று அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள வரி விலக்கின் வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது, புதிய வரி முறையில், ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நிலையான விலக்கு கிடைக்கிறது. இதைத் தவிர, வேறு எந்த வகையான விலக்குக்கும் இதுவரை இதில் வசதி இல்லை.
நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது சவாலாக இருக்கும்
நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று பெரிய பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். நடப்பு நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 4.9% ஆகும். இதை 2026 ஆம் ஆண்டுக்குள் 4.5% க்கும் குறைவாகக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா! வருமான வரி நோட்டீஸ் வரலாம்? எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ