Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்

Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea ரூ .130 க்கும் குறைவான வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 11:41 AM IST
Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள் title=

முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடபோன்-ஐடியா (Vi) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பல நல்ல செய்திகளை அளித்துள்ளன. இவை அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய அற்புதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். 

அதன்படி Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea ரூ .130 க்கும் குறைவான வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. அதன் முழு விவரத்தை இங்கே பார்போம். 

ALSO READ | Jio அட்டகாச ரீசார்ஜ் பிளான்கள்: ரூ.98-ல் 21GB தரவு, வரம்பற்ற அழைப்பு, இன்னும் பல நன்மைகள்

Airtel ரூ 129 திட்டம்
ஏர்டெல் திட்டங்களைப் பொறுத்தவரையில் 100 ரூபாய்க்கும் குறைவாக அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் திட்டங்கள் எதுவும் இல்லை. மேலும் வேலிடிட்டியும் 14 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. 129 ரூபாய் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 1 ஜபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீரிம் செயலிகளின் உபயோகமும் கூடுதலாக கொடுக்கப்படுகிறது.

Reliance Jio ரூ 129 திட்டம்
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். 28 நாட்களுக்கு இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் மொத்தம் 2 ஜிபி டேட்டா (Data Plan) மற்றும் அனைத்து ஜியோ செயலிகளுக்கும் இலவச சந்தாவையும் பெறுவார்கள். மேலும், வாடிக்கையாளர் மொத்தம் 300 எஸ்எம்எஸ் மற்றும் எண்ணற்ற குரல் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.

Vodafone-Idea ரூ 129 திட்டம்
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா, 300எஸ்எம்ஸ், இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். வோடபோன்-ஐடியா அதன் ரூ 129 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் எந்த OTT இயங்குதளம் அல்லது பயன்பாடுகளுக்கும் சந்தா வழங்காது.

ALSO READ | இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News