வரும் நிதியாண்டில் சுமார் 80000 பணியாளர்களை வேலைக்கு எடுக்க Reliance Jio திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
Jio நிறுவனத்தின் சார்பில் ஒருங்கினைக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குனர் சஞ்சய் ஜாக் தெரிவிக்கையில்... விரைவில் 75000-லிருந்து 80000 பணியாட்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு இந்த பதிலினை சஞ்சய் ஜாக் தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும் இந்த பணியெடுப்பானது நிறுவனத்தின் தோய்வு நிகர்வில் 32% ஆக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தலைமையகத்தினை ஒப்பிடுகையில் இந்த அளவானது வெறும் 2% தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர், Jio-வுடன் கிட்டத்தட்ட 6000 கல்வியல் நிறுவனங்கள் பங்குதாரராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணிநியமனம் குறித்து வினவுகையில், முந்தைய ஊழியர்களின் பரிந்துறையின் பேரிலும், சமூக வலைதளங்களின் உதவியாளும் நடைப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.