கார்களின் விலைகளை உயர்த்தியது டோயோடா நிறுவனம்: விவரம் இதோ

Toyota Kirloskar Motor: டோயோடா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா, இந்தியாவிற்கான எஸ்யுவி -கள் மற்றும் கார்களின் மொத்த லைன் அப்பின் விலையை உயர்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2023, 03:37 PM IST
  • கார்களின் விலை ஏன் உயர்ந்தது?
  • எவ்வளவு விலை உயர்ந்தது?
  • நிறுவனம் இந்த கார்களை விற்பனை செய்கிறது.
கார்களின் விலைகளை உயர்த்தியது டோயோடா நிறுவனம்: விவரம் இதோ title=

Toyota Kirloskar Motor: டொயோடா நிறுவனத்தின் கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. டோயோடா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா, இந்தியாவிற்கான எஸ்யுவி -கள் மற்றும் கார்களின் மொத்த லைன் அப்பின் விலையை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலைகள் ஜூலை 5, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் இரண்டாவது முறையாக கார்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கார்களின் விலை ஏன் உயர்ந்தது

தற்போது, ​​டொயோட்டா நிறுவனம் ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் புதிய விலைகள் குறித்த தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த விலை உயர்வுக்கான காரணம், உள்ளீட்டு செலவு அதிகரிப்பு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம், அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு குறைவாக இருப்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எவ்வளவு விலை உயர்ந்தது?

தற்போது, ​​இந்நிறுவனத்தின் மிகவும் டிமாண்டிங் காரான இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை ரூ. 18.35 லட்சத்தில் இருந்து ரூ. 18.52 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே சமயம் அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் விலையும் அதிகரித்து தற்போது ரூ. 10.86 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான எஸ்யூவி ஃபார்ச்சூனரின் ஆரம்ப விலை தற்போது ரூ. 32.99 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, நிறுவனம் ஏற்கனவே அனைத்து கார்களின் விலைகளையும் 1.5 முதல் 2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | Maruti Suzuki Invicto Vs Toyota Hycross: உங்களுக்கு ஏற்ற கார் எது? முழு ஒப்பீடு இதோ 

நிறுவனம் இந்த கார்களை விற்பனை செய்கிறது

தற்போது, ​​டொயோட்டா இந்தியாவில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கிளான்சா, இன்னோவா கிரிஸ்டா, இன்னோவா ஹைக்ராஸ், ஃபார்ச்சூனர், ஃபார்ச்சூனர் லெஜெண்டர், கேம்ரி மற்றும் வெல்ஃபயர் போன்ற கார்களை விற்பனை செய்து வருகிறது. ஜூன் 2023 இல், நிறுவனம் 19,608 யூனிட்களை விற்றது. இது ஜூன் 2022 ஐ விட 19 சதவீதம் அதிகம் ஆகும். அடுத்த சில மாதங்களில் புதிய எஸ்யூவி கூபே, புதிய 7 சீட்டர் எஸ்யூவி மற்றும் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் மாருதி ஃபிராங்க்ஸை அடிப்படையாக கொண்டு வர நிறுவனம் தயாராகி வருகிறது.

கூடுதல் தகவல்:

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் ஆகவுள்ள கார்கள்: 

அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கப் போகிறது. பொதுவாக இந்த காலத்தில் மக்கள் உற்சாகமாக ஷாப்பிங் செய்கிறார்கள், குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையில், இந்த சீசனில் மிகுந்த உற்சாகம் இருக்கும். இந்த காரணத்திற்காக, பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இந்த நேரத்தை தேர்வு செய்கிறார்கள். 

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த பண்டிகை காலத்திலும், ஆட்டோமொபைல் சந்தை நல்ல சலசலப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த முறை சில புதிய கார்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவை ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவற்றில் சில கார்கள் இதோ:

- ஹூண்டாய் எக்ஸ்டர்
- டாடா பஞ்ச் சிஎன்ஜி
- டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்
- டொயோட்டா டெசர்
- ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்

மேலும் படிக்க | 2023 Kia Seltos Facelift அறிமுகம் ஆனது: விலை, அம்சங்கள், பிற விவரங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News