சூரிய கிரகணம்: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் தெரிகிறது!

தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு நெருப்பு வளையம் போன்று தோன்றும் முழு சூரிய கிரகணம் தெரியவுள்ளது.

Last Updated : Dec 22, 2019, 01:34 PM IST
சூரிய கிரகணம்: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் தெரிகிறது! title=

தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு நெருப்பு வளையம் போன்று தோன்றும் முழு சூரிய கிரகணம் தெரியவுள்ளது.

வரும் 26 ஆம் தேதி நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் முழுமையாக பார்க்க முடியும். மற்ற பகுதிகளில் பகுதி சூரிய கிரணகன காட்சியை காணலாம்.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிரது. 

இந்த சூரியகிரகணமானது காலை 8:00 மணி முதல் 11:16 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது. இதை மக்கள் வெறும் கண்ணால் பாா்க்க கூடாது. இதற்காக கொடைக்கானலிலுள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னால் இந்த சூரிய கிரகணமானது கடந்த 1996-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் நிம்கா தானா என்ற இடத்தில் தெரிந்தது. தற்போது 23-ஆண்டுகளுக்கு பிறகு தெரிய உள்ளது. 

இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கர்நாடக மாநிலத்தின் தென்பகுதி, கேரளாவின் வடபகுதியிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். மற்ற பகுதிகளை விட தமிழகத்தில்தான், அதிக அளவில் இந்த அபூர்வ சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். 

இந்த சூரிய கிரகணத்தை குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் பார்க்க முடியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க தமிழகத்தில் 11 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் 10 இடங்களிலும், பகுதியாக தெரியும் சென்னையிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து 2020-ஆம் ஆண்டு அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும், அதற்கு அடுத்தபடியாக 2031-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனியிலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்” என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Trending News