Tablet In Low Price: கொரோனா காலகட்டத்திற்கு பின் வீட்டில் இருந்தே பணிப்புரியும் (Work From Home) வாய்ப்பு எப்படி அதிகரித்ததோ அதேபோல்தான், வீட்டில் இருந்த பள்ளி/கல்லூரிகளில் படிக்கும் வழக்கமும் அதிகரித்தது. ஆன்லைன் மூலமாக கற்றல் மற்றும் செய்முறை விளக்கங்கள் ஆகியவை பெற்றோர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் ஆர்வத்தை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, டிஜிட்டல் மூலமான இந்த கற்றல் காலத்தின் தேவை மட்டுமின்றி கற்றலை பரந்துப்பட்ட செயல்பாடாக மாற்றுகிறது. இருப்பினும், இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக்கனிதான். ஏனென்றால், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவை இதுபோன்ற டிஜிட்டல் கற்றலுக்கு அடிப்படையானவை. ஸ்மார்ட்போன்கள் பெற்றோரிடத்தில் இருக்கும் என்றாலும், மாணவர்களின் பிரத்யேக தேவைக்கு என தனியாக ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது பலருக்கு ஏற்க இயலாத செலவீனம்தான்.
முன்னணி பிராண்டுகள்
அந்த வகையில்தான், தமிழ்நாடு அரசும் கூட பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கவும் முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்தளவிற்கு டிஜிட்டல் கற்றல் என்பது இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு அவசியமாகிறது. இந்நிலையில், மலிவு விலையில் தரமான Samsung, Lenovo, Realme போன்ற நிறுவனங்களில் டேப்லட்கள் இப்போது அமேசான் தளத்திலேயே கிடைக்கிறது.
மேலும் படிக்க | உங்கள் குழந்தைகள் மொபைலுக்கு அடிமையா... தடுப்பதற்கான வழிகள் என்ன?
கல்வி மற்றும் கற்றல் பயன்பாடுகளுக்கு உபயோகமாக இருக்கும் இந்த டேப்லட்களை பொற்றோர்களும் நம்பி வாங்கி கொடுக்கலாம். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுக்கு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், 500 ரூபாய்க்கும் குறைவான தொகையை செலுத்தி மாதாந்திர தவணை முறையில் (EMI) நீங்கள் வாங்கலாம்.
Samsung Galaxy Tab A7 Lite
8.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த சாம்சங் டேப்லெட்டில் 5100mAh சக்தி வாய்ந்த பேட்டரி உள்ளது. டேப்லெட்டில் 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. இது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இந்த டேப்லெட்டில் 3ஜிபி RAM உடன் 32ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்கலாம். இதில் 8MP பின்புற கேமரா உள்ளது. டேப்லெட்டில் செல்ஃபி எடுக்க 2MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை 9 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். அமேசானில் இருந்து 485 ரூபாயில் மாதத்தவணை செலுத்தி இதனை வாங்கலாம்.
Lenovo Tab M8 HD
இந்த டேப்லெட்டில் 3ஜிபி வரை RAM உள்ளது. அத்துடன் 32ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேயின் பிக்சல் ரெஸ்சோல்யூஷன் 1280 X 800 ஆகும். இந்த டேப்லட் ஐபிஎஸ் எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. இதன் ஸ்டோரேஜை 128ஜிபி வரை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். டேப்லெட்டில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு 8MP கேமரா உள்ளது. செல்ஃபிக்காக 2MP முன்பக்க கேமரா உள்ளது. இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 9 பை கோ பதிப்பில் இயங்குகிறது. இந்த டேப்லெட்டின் விலை 6 ஆயிரத்து 830 ரூபாய் முதல் தொடங்குகிறது. இந்த டேப்லெட்டை அமேசானில் இருந்து 331 ரூபாய் மாதாந்திர தவணையில் நீங்கள் வாங்கலாம்.
Realme Pad Mini
Realme நிறுவனத்தின் இந்த டேப்லெட் 3GB RAM மற்றும் 32GB இன்டெர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் உடன் 6400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 8.7 இன்ச் HD டிஸ்ப்ளே உள்ளது. டேப்லெட்டில் 8MP பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வீடியோ அழைப்பிற்காக, அதன் முன்பக்கத்தில் 5MP கேமரா உள்ளது. டேப்லெட் Android 11இல் இயங்குகிறது. இதன் விலை 9 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். அமேசானில் இருந்து 485 ரூபாயில் மாதத் தவணை செலுத்தி இதனை வாங்கலாம்.
மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் பக்காவான டேப்லெட் - சிறப்பம்சங்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ