தற்போது ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறி விட்ட நிலையில், பலருக்கு சிறந்த அமசங்கள் கொண்ட வேகமாக இயங்கும் போன் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. மிக குறைந்த விலையில் வரும் போன்களில், இதை எதிர்பார்ப்பது சிறிது கஷ்டம் தான். மிக நல்ல ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் நிச்சயம் தேவை. இத்தகைய போன்கள் உபயோகப்படுத்த எளிதாக திரை அளவு பெரியாதாக கொண்டிருப்பதோடு, வேகமாக செயல்படும் சக்தி வாய்ந்த செயலி, நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி திறன் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜர் போன்ற அம்சங்களுடன் கிடைக்கும்.
ஸ்மார்போன் வாங்க இஎம்ஐ, கிரெடி கார்டு வசதி போன்றவை கிடைப்பதால், இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட போனை (Smartphone) வாங்குவது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. அந்த வகையில், ரூ.20,000 விலையில் கிடைக்கும் 5 ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி M35 (Samsung Galaxy M35)
சாம்சங் கேலக்ஸி M35 ஸ்மார்போனின் விலை ரூ.19,999. ஆண்ட்ராய்டு 14 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன், எக்ஸினோஸ் 1380 சிப் மற்றும் மாலி-ஜி68 கிராபிக்ஸ் சிப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 6.6 இன்ச் சூப்பர் AMOLED திரை கொண்ட இந்த போன், வீடியோக்களைப் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கும் சிறப்பாக இருக்கும். இதில் உள்ள 6000 mAh பேட்டரியும், 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜரும் போன் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கவும், வேகமாக சார்ஜ் செய்யவும் உதவும். தொலைபேசியில் மூன்று கேமராக்கள் உள்ளன. 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, இரண்டாவது 8 மெகாபிக்சல் அகலக் கோண கேமரா மற்றும் மூன்றாவது 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா. செல்ஃபி கேமரா 13 மெகாபிக்சல்கள் கொண்டது.
நத்திங் CMF ஃபோன் 1 (Nothing CMF Phone 1)
நத்திங் CMF போன் 1 மாடலைன் விலை ரூ.16,775. ஆண்ட்ராய்டு 14 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஃபோனில் MediaTek Dimensity 7300 சிப் மற்றும் Mali-G615 கிராபிக்ஸ் சிப் உள்ளது. இதில் 6.67 இன்ச் AMOLED திரை உள்ளது. தொலைபேசியில் 5000 mAh பேட்டரி உள்ளது. இதனை 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் விரைவாக சார்ஜ் செய்யலாம். தொலைபேசியில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் கொண்ட கேமரா உள்ளது. செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல்கள்.
மேலும் படிக்க | போன் வாங்க பிளானா... சுமார் ₹25000 விலையில் கிடைக்கும் அசத்தல் போன்கள்...!
போகோ எக்ஸ்6 (Poco X6)
தண்ணீர் மற்றும் தூசியால் பாதிக்கப்படாத அம்சஙக்ள் கொண்ட Poco X6 மாடல் ஃபோனின் ஆரம்ப விலை 16,500 ரூபாய். Android 13 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஃபோனில், Qualcomm Snapdragon 7s Gen 2 சிப் உள்ளது. 6.67 அங்குல AMOLED திரை உங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். தொலைபேசியில் 5100 mAh பேட்டரி உள்ளது. இதனை 67 வாட் வேகமான சார்ஜருடன் 44 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். ஃபோனில் மூன்று கேமராக்கள் உள்ளன. அதில் ஒன்று 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, இரண்டாவது 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா. செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல்கள்.
ரியல்மீ நர்ஸோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro)
Android 14 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும், Mediatek Dimensity 7050 சிப் உள்ள ரியல்மீ நர்ஸோ 70 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.17,998. 6.67 இன்ச் AMOLED திரை உள்ள இந்த தொலைபேசியில் மூன்று கேமராக்கள் உள்ளன, அவற்றில் ஒன்று 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, இரண்டாவது 8 மெகாபிக்சல் அகலக் கோண கேமரா மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா. செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல்கள். தொலைபேசியில் 5000 mAh பேட்டரி உள்ளது. இதனை 67-வாட் வேகமான சார்ஜருடன் 19 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ