டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோவில் (Tiago) சி.என்.ஜி காரை மார்க்கெட்டில் களமிறக்க உள்ளது. இம்மாத இறுதியில் மார்க்கெட்டில் நுழையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தக் காரின் டீசரை தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களே காத்திருங்கள், 2022 - ன் கேம் சேஞ்சர் விரைவில் வரப்போகிறது என ஃபயர்மோட் டைலாக்கில் கூறியுள்ளது.
Get ready for the game ChaNGer this 2022!
Coming Soon.#HappyNewYear #NewYear #Happy2022 pic.twitter.com/TTaYurEhBw
— Tata Motors Cars (@TataMotors_Cars) December 31, 2021
ALSO READ | Hyundai; SUV விற்பனையில் கோலோச்சும் ஹூண்டாய்..! இந்த ஆண்டுக்கும் ப்ளான் ரெடி..!
ஜனவரியின் இறுதியில் வெளியாகும் இந்தக் காரின் ஷோ ரூமின் விலை 5.5 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மார்க்கெட்டை குறிவைத்து டியாகோ வெளியாவதால் ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ சிஎன்ஜி, மாருதி சுஸுகியின் எஸ்-பிரஸ்ஸோ மற்றும் வேகன் ஆர் எஸ்-சிஎன்ஜி கார்களுக்கும் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இப்போது புழக்கத்தில் இருக்கும் டியாகோ 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 86PS மற்றும் 113Nm, 5-ஸ்பீடு நிலையான மற்றும் மேனுவல் ஆப்சனைக் கொண்டிருக்கிறது. சிஎன்ஜி மாடலில் இந்தக் கார் இப்போது வெளியாவதால் சற்று குறைந்த பீக் பவர் மற்றும் குறைந்த டார்க் திறனை வெளிப்படுத்துபவையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | ALSO READ | இன்டர்நெட் இல்லாமல் Google Map பயன்படுத்துவது எப்படி?
அதேநேரத்தில் அக்சரிஸ் எனப்படும் உபகரணங்கள் பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. வைப்பர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் 8-ஸ்பீக்கர் ஹர்மன் ஆடியோ சிஸ்டம் என இப்போஉ இருக்கும் காரில் இருப்பது போலவே சி.என்.ஜியிலும் இருக்கும். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இருக்கும். குளோபல் என்.சி.ஏ.பியானது, புதிதாக வெளிவர உள்ள டாடா டியாகோவிற்கு நான்கு நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதால், கார் வைத்திருப்பவர்கள் சி.என்.ஜி கார்களை அதிகம் விருப்பத் தொடங்கியுள்ளனர். இது டாடா டியோவிற்கு பிளஸாக பார்க்கப்படுகிறது. மேலும், போட்டியாளர்களை ஒப்பிடும்போது 5.5 லட்சம் ஷோரும் விலையில் வெளிவரும்பட்சத்தில் இந்தக் காருக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR