Vodafone Idea மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் பல பிரபலமான திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஜியோவின் திட்டத்தை முறியடிக்கும் ரூ.299 திட்டம் Vi ஐ கொண்டுள்ளது. Vodafone Idea (Vi) Vi ஹீரோ பயனர்களுக்கு ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது ஒரு குறுகிய செல்லுபடியாகும் திட்டமாகும். மேலும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டண உயர்வுக்குப் பிறகு, இந்த திட்டம் பயனர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. ஆனால் எப்போதும் போல, Vi தனது போட்டியாளர்களை விட கூடுதல் சலுகைகளை Vi வழங்குகிறது. இருப்பினும், ஜியோ வழங்குவதை விட Vi பிபெய்ட் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருப்பதற்கான காரணங்கள்
வோடபோன் ஐடியா ரூ 299 திட்டம்
Vodafone Idea (Vi) அதன் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை 28 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த 28 நாட்களுக்கு, பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவை கிடைக்கும். இது தவிர, பயனர்கள் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights சலுகைகளைப் பெறுகின்றனர். Vi Movies மற்றும் TV கிளாசிக் அணுகலுக்கான கூடுதல் ஓவர்-தி-டாப் (OTT) சந்தாவும் இதில் அடங்கும்.
மேலும் படிக்க | ஏர்டெல் பயனர்களை பொறாமைபட வைக்கும் ஜியோவின் 2.5 ஜிபி திட்டங்கள்
ஜியோ ரூ 299 திட்டம்
ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டமும், அதே வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளுடன் வழங்குகிறது. இருப்பினும், ஜியோவின் திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபி ஆகும், இது Vi வழங்கும் திட்டத்தில் பயனர்கள் பெறும் டேட்டாவை விட 500எம்பி அதிகம்.
ஏர்டெல் ரூ.299 திட்டம்
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்பு, 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் ஏர்டெல் தேங்கஸ் பலன்களைப் பெறுகிறார்கள். இது Vi இன் திட்டத்திலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல, ஆனால் பயனர்களுக்கு Vi Hero அன்லிமிடெட் தொகுப்புகளை வழங்கும் வகையான நன்மைகளுடன் இது வரவில்லை.
மேலும் படிக்க | ஜியோவின் அசத்தல் பிளான் – ஆண்டுக்கு ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் போதும்
மேலும் படிக்க | TechTips: ஸ்மார்ட்போன் கவரால் குறையும் சிக்னல் வேகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR