மத்திய அரசு நிவாரணம் அளிக்காவிட்டால் ‘வோடபோன் ஐடியா’ மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை என
இந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வருவாயின் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால், தொகை செலுத்தாமல் இருக்க வருமானத்தைக் குறைத்துக் காண்பித்து சிக்கலில் சிக்கிக்கொண்டது வோடபோன் ஐடியா நிறுவனம்.
இந்த வழக்கில் மத்திய அரசுக்கு டெலிகாம் நிறுவனங்கள் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும் ஜியோவின் வருகையால் வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.
இந்நிலையில் இதுகுறித்து இந்நிறுவனங்கள் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. மேலும் மத்திய அரசு நிவாரணம் அளிக்காவிட்டால் ‘வோடபோன் ஐடியா’ மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை என வோடபோன் ஐடியா தலைவர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.