டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களுடன் போட்டியிட YouTube தயாராகி வருகிறது. நீங்கள் ஷார்ட்ஸ் (Youtube Shorts) உருவாக்கும் கிரியேட்டராக இருந்தால், நிறைய பணம் சம்பாதித்து நீங்கள் மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அது என்னவென்றால், மானிடைசேஷனைக் கொண்டு வர யூ டியூப் திட்டமிட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஷார்ட்ஸ் வீடியோக்கள் இப்போது YouTube கிரியேட்டர்ஸ் பார்ட்னர் திட்டத்தில் சேர்க்கப்படும். அதாவது இதற்குத் தகுதி பெறும் படைப்பாளிகள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் பொன்னான வாய்ப்பைப் பெறுவார்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தகுதி பெறாத படைப்பாளிகளுக்கு கூட YouTube சில சிறப்பு விருப்பங்களை வெளியிட இருக்கிறது. தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறாத படைப்பாளிகள் உதவிக்குறிப்புகள், சந்தாக்கள் மற்றும் வணிக விற்பனை மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
Youtube-ல் இருந்து வரும் இந்தப் புதிய திட்டத்தின் கீழ், TikTokஐ விட அதிக பணமாக்குதல் விருப்பங்களைப் பெறுவீர்கள். இதன் மூலம் யூடியூப் நிறுவனம் போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 1.5 ஆண்டுகளுக்கு முன்பு ஷார்ட்ஸ் வீடியோ அம்சத்தை யூ டியூப் தொடங்கியது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதனை மேலும் விரிவாக்கியது யூ டியூப். யூ டியூப் நிறுவனத்தின் கிரியேட்டர் தயாரிப்பு பிரிவின் துணைத் தலைவர் கூறுகையில், வரும் ஆண்டுகளில் இந்த அம்சம் இன்னும் வேகமாக மக்களைச் சென்றடையும். ஒவ்வொரு மாதமும் 1.5 பில்லியன் மக்கள் ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய அம்சம்: மக்கள் ஹேப்பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ