திருவாரூர்: வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் ஆழித்தேரோட்டம் சிறப்பாக துவங்கியது!
மிகவும் பழமையான, வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் சுவாமி கோவிலின் ஆழித்தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தின் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பழமை வாழ்ந்தது, வரலாற்று சிறப்பு மிக்கது. ஆசியாவிலேயே மிக பெரிய ஆழித்தேரினை இக்கோவில் கொண்டுள்ளது.
இச்சிறப்புமிக்க ஆழித்தேரோட்டத்தையொட்டி கடந்த 20-ஆம் தேதி தியாகராஜ சுவாமி ஆலயத்தில் இருந்து ஆழித்தேருக்கு எழுத்தருளினார். இதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. தேரடியில் இருந்து கீழரத வீதியில் சென்ற இத்தோரோட்டம் ஆரூரா, தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் அசைந்தாடியபடி புறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் கோவிலில் குவிந்தனர். எனவே பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவிலை சுற்றிலும் 15 தீயனைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.