உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் போன்றவை வைக்க சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கேநகர் தொகுதி காலியாக உள்ளது. இங்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை செலுத்தி இறக்குமதி செய்த மணலுக்கு, விற்பனை செய்ய அனுமதி மறுப்பது ஏன் என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மணலை விற்க தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, மின்சார வாரியம், மின்சாரம், சிறுமிகள், உயிரிழப்பு, ஐகோர்ட், உயர் நீதிமன்றம், Chennai, Electricity Attack, Electric Board, Tamilnadu, TN Gove, High Court,
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.
தமிழக சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் வைக்கப்பட விளம்பர பலகையால் விபத்துகள் நேர்கின்றன என கோவை நுகர்வோர் மையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.
மறைந்த முன்னாள் ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் வரும் 6-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது, தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது 3 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் சமர்பித்த விண்ணப்பங்களில் ஜெயலலிதாவின் கைரேகை இடம் பெற்றது.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். சுயநினைவோடு தான் ஜெயலலிதா கைரேகை வைத்தரா என விசாரிக்க கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
சேலத்தில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ மாணவியரை அழைத்து செல்ல சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு மாணவ, மாணவியரை அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்று கொள்ள முடியாது.
பொது நிகழ்ச்சிகளில் குழந்தைகள் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி தரக்கூடாது என உத்தரவு பிறப்பித்து வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில காவல்துறை தான் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 4-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள்வெளியிட வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணத்தால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணத்தில் இல்லை. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழக தேர்தல் கமிஷன் சார்பில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.