இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்:-
இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர் என்றும் கல்வி மேம்பட ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் என்றும் தனது டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.
இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர். கல்வி மேம்பட நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் இவ்வாசிரியர் தினத்தன்று.
ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கியது.
அதில், இந்திய அரசியல் சாசனத்தின்படி, தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய சட்ட அமைச்சகம், நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு கொண்டுவரும் சட்ட முன்வடிவுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த செய்தி வெளியானதும் நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி கூறி உள்ளார்'
"நன்றி NEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும். ஒரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே. இனி என்ன செய்வோம்?"
என தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது,
சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அதே இடத்தில் வைக்க கமல்ஹாசன் குரல் கொடுப்பேன் என்று சொல்லட்டும். அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை டிவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்.
இந்த வகையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
"ஒரு மாநிலத்தில் நடந்த துர்சம்பவத்துக்கும் ஊழலுக்கும் அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் எனக் கட்சிகள் கோருகிறது என்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என எந்தவொரு கட்சியினரும் கோராதது ஏன்? தமிழக முதல்வரின் ராஜினாமாவைக் கோரும் அளவுக்கு இங்கு குற்றங்கள் நடந்திருக்கின்றனவே?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராதிய ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து உள்ளார்.
சென்னை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எச்.ராஜா கமல்ஹாசன் பற்றி கூறியதாவது:-
விஸ்வரூபம் பட பிரச்சினையில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும் அளவுக்கு கோழைத்தனமாக செயல்பட்டார். தற்போது முரசொலி பவள விழாவில் பங்கேற்றதன் மூலம் தான் ஒரு திமுக-வின் கைக்கூலி, ஊதுகுழல் என்பதை நிரூபித்து இருக்கிறார் என எச்.ராஜா கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலர் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தினம் ஒரு தகவலாய் எதேனும் ஒரு விவகாரத்தை பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமிப காலமாக நெட்டிசங்கள் அவருடைய ட்விட்டர் பதிவுக்காக இரவு நேரங்களில் காத்து கொண்டிருகின்றனர்.
நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் பங்கேற்றபின் டுவிட் ஒன்றை செய்துள்ளார் கமலஹாசன் அவர்கள்.
கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:-
விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே
களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்
சென்னை மெரினாவிலிருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றப்பட்டதை குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தினம் ஒரு தகவலாய் எதேனும் ஒரு விவகாரத்தை பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமிப காலமாக நெட்டிசங்கள் அவருடைய ட்விட்டர் பதிவுக்காக இரவு நேரங்களில் காத்து கொண்டிருகின்றனர்.
இந்நிலையில் மெரினா இருந்து இரவோடு இரவாக நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:-
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளம்பராக பணியாற்றிய ஊழியர் மரணமடைந்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டது.
இந்த செட்டின் பிளம்பராக வேலை செய்த மும்பையைச் சேர்ந்த கரீம் இப்ராஹிம் ஷேக் திடீரென்று இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை' என என நடிகர் கமல் தனது டிவிட்டர் பகத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் குறித்து நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். கமலின் கருத்துக்கு தொடர்ச்சியாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
முரசொலி பவள விழாவில் கமல் மற்றும் ரஜினி அழைப்பு
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி துவங்கப்பட்டது. முரசொலி துவங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்துடன் 75 வருடங்கள் ஆகிவிட்டது. முரசொலி பத்திரிக்கையின் 75 ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திமுக சாபில் முரசொலிக்கு பிரம்மாண்டமான பவள விழா நடைபெறுகிறது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பவள விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் குறித்து நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். கமலின் கருத்துக்கு தொடர்ச்சியாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட்:-
சென்னையில் இன்று தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.
கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்:-
A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம் pic.twitter.com/OFqbDaJ5wS
— Kamal Haasan (@ikamalhaasan) July 19, 2017
புரோ கபடி லீக்கில் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
நடிகர் கமல்ஹானை முதுகெலும்பில்லாத கோழை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலை பற்றி தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதைப்பற்றி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் 4-ம் ஆண்டு நினைவு நாளில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது,
முதல்வர் ஆசை கமல்ஹாசனுக்கு மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம். ஆனால் முதல்வர் ஆகுவதற்கு தகுதி வேண்டும்.
நடிகர் கமல்ஹாசன் கவிதை மூலம் தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டிவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி pic.twitter.com/yoFMD8jeJO
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2017
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து, அதனை நடத்திவரும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து நிருபர்களுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில்., "என்னை கைது செய்தால், சட்டம் என்னைப் பாதுகாக்கும் என்று கூறியதுடன், தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
கமலின் கருத்துக்கு சட்டத் துறை அமைச்சர் சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
வட இந்தியாவில் பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் ஹிட் நிகழ்ச்சி ஆகும். விரைவில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க போகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இதற்கான படப்பிடிப்பும் தொடங்கிவிட்டன. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செட்டில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் பிக்பாஸ் குறித்த 10 வினாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமலஹாசன் மீதான வழக்கை விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்து உத்தரவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், மகாபாரதம் பற்றி சில கருத்துகளை கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் மகாபாரதம் பற்றி தவறான கருத்துகளை கூறியதால் நடிகர் கமல்ஹாசனுக்கு அபராதத்துடன் கூடிய அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கமல் மீது வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.