நடிகர் கமலஹாசன் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோரட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், மகாபாரதம் பற்றி சில கருத்துகளை கூறினார்.
விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்.
கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர்.
ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு நடிகர் கமல்ஹாசன் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு
மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், மகாபாரதம் பற்றி சில கருத்துகளை கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களின் உதவியுடன் அவர் தீ விபத்திலிருந்து தப்பித்துள்ளார் கமல்ஹாசன்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டிவீட் பதிவு இட்டார்.
'என் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். மூன்றாவது மாடியில் இருந்து இறங்கியுள்ளேன். இப்போது நலமாக உள்ளேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதவிய ஊழியர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களின் அன்புக்கும் நன்றி' எனக்கூறியுள்ளார்.
நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர்'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மறைந்த கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் நினைவேந்தல் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷ்ராஹாசன், சுஹாசினி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
நினைவேந்தல் கூட்டம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியது:-
கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லண்டனில் கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள்,அரசியல் பிரமுகர்கள் அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் கூறியதாவது:-
நடிகர் கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகுதான் ஞானோதயம் வந்துள்ளது என்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
விஸ்வரூபம் படம் வெளிவருவதற்கு உதவியவர் ஜெயலலிதா. நன்றி மறந்து பேசுகிறார் கமல். கிராமங்களுக்கு சென்று மக்களை என்றாவது சந்தித்திருக்கிறாரா கமல்.
65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்துள்ளது எனக் கூறினார். மேலும் ஆட்சி தொடரக்கூடாது என்கிறார் கமல் என்றும் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
செங்கோட்டையனுக்கு எலும்பில்லாத சாப்பாடு பிடிக்கலாம். எனக்குப் பிடிக்காது என கமல் டுவட்டரில் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் குறித்து கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பரபரப்பாக கருத்து தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரம் முதல் தமிழக அரசுக்கு எதிராக தைரியமாக கருத்துக்களை முன் வைத்து வருகிறார் கமல்ஹாசன். அதிமுகவின் சசிகலா அணி ஆட்சியை வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனை குறித்த செங்கோட்டையன் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார்.
தமிழக அரசியல் மாற்றம் குறித்தும், ஜல்லிக்கட்டு குறித்தும், நடிகர் கமல்ஹாசன் அன்றாடம் தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு வருகிறார். இது தமிழக அரசியல்
மற்றும் திரையுலக வட்டாரத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில் கமல் ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில்“பீலிபெய் சாகாடும் அச்சிறும்அப்பண்டம் சால மிகுத்துப்பெறின்” என்ற திருக்குறளை வெளியிட்டிருந்தார்.
சிறுமி நந்தினி கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் கமல் பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி(17) டிசம்பர் 29-ம் தேதி காணாமல் போனார். 15 நாட்களுக்கு பிறகு சிறுமி கடந்த ஜனவரி 14-ம் தேதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நேற்று காலை வெளியேற்றப்பட்டார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.
நேற்று முதல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து டிவீட் செய்த கமலஹாசன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
போராட்டகாரர்கள் மீது போலீஸ் தடியடி நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- இது தவறானது. மாணவர்கள் மீதான போலீசாரின் ஆக்ரோஷ நடவடிக்கை, நல்ல பலனை தராது என கூறியுள்ளார்.
This is a mistake. Aggressive police action on students passive resistance will not bear good results.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
மாணவர்களின் போராட்டத்தை கலங்கிய கண்களோடு பார்ப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிகட்டு தடைக்கு எதிராகவும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தற்போது ஒட்டுமொத்த தமிழினமே ஒன்று திரண்டு போராடிக் கொண்டிருக்கிறது. அவர்களின் போராட்டத்தை கலங்கிய கண்களோடு பார்ப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியிருந்தார்.
அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவிலிருந்து செல்லாது. நவம்பர் 9-ம் தேதி முதல், இந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும் என்று தெரிவித்தார்.இதற்கு பதிலாக புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் தாள்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இன்று பல பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் . 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவிற்கு தொண்டாற்றிய இந்த மகா கலைஞனை பற்றி பார்போம்
1954- ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். சென்னை சாந்தோம் பள்ளிகளில் படித்தார்.
1960-ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
- நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பாரத்து வெட்கப்பட வேண்டி வரும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை
நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.