டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்து வரும் நிலையில், அடுத்ததாக பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வழக்கம் போலவே, பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினால் மக்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது.
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 15-ஆம் தேதி வரை 3244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் எனவே அரசு துங்கமால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது சமூக வலைத்தளத்தில் டாக்டர். அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
டெங்குவால் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துக் காட்டும் முயற்சியில் இல்லமால், வெறும் புள்ளி விபரங்களை அரசு மேற்கொள்ளமல் நோயை கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழக முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதைக்குறித்து வைகோ தனது சமூக வலைபக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
டெங்குக் காய்ச்சல் மற்றும் வைரஸ், மூளைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரு நாட்களில் டெங்குக் காய்ச்சலால் பல மாவட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது டெங்குக் காய்ச்சலின் தீவிரத்தைக் காட்டுகிறது.
சத்தீஸ்கரில் வனப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை 7 கி.மீ தொலைவுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சத்தீஸ்கர் வனப்பகுதிகள் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம். மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
சத்தீஸ்கரின் தண்டேவடா வனப்பகுதியில் மலைப் பகுதியில் பழங்குடி இன பெண் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் செல்ல இயலாது அந்த கிராமத்துக்கு செல்ல காட்டுப் பாதைதான் உள்ளது. ஆகையால் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த 23ஆம் தேதி காய்ச்சல் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பரிசோதனைக்கு பிறகு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் ராணா தெரிவித்துள்ளார். உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டுள்ளார். அவரும் டாக்டர்கள் குழுவினருடன் இணைந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 22-ம் தேதி இரவு உடல் நலக் குறைவால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குணம் அடைந்தது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பி அரசு பணிகளை கவனித்து வருகிறார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வார்டில் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா, இளவரசி ஆகியோர் உள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திரண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.