தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 22-ம் தேதி இரவு உடல் நலக் குறைவால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குணம் அடைந்தது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பி அரசு பணிகளை கவனித்து வருகிறார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வார்டில் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா, இளவரசி ஆகியோர் உள்ளனர்.
ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி கோவில்களில் பூஜை செய்து பிரசாதங்களையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்கிறார்கள்.
5-வது நாளான இன்று அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டார். எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. இருந்தாலும் ஆஸ்பத்திரியில் இருந்த படியே முக்கிய அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.