வரும் அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பு:-
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
நாள் ஒன்றுக்கு 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு, தாம்பரம் சானிட்டோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கேகே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,275 பஸ்களும் இயக்கப்படும்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரம் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசால் பொதுக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக டெல்லியில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்றில் அதிக மாசு கலந்தது. இத்துடன், டெல்லியை ஒட்டி உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவுகளை எரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் காற்றில் புகை மண்டலம் டெல்லி முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் குழந்தைகளும் வயதானவர்களும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் தீப ஒளி திருநாளான இன்று பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தும், கோவில்களில் தீபம் ஏற்றியும் சுவாமியை வழிப்பட்டனர். வாழ்வில் இருள் நீங்கி வளமான வாழ்வு அமைய வேண்டி உற்றார் உறவினர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் நாளை தீபாவளி கொண்டாடுகிறார். இப்பகுதி சீன எல்லையில் அமைந்துள்ளது. பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் செல்கிறார். தீபாவளி கொண்டாடத்தை முடித்துக்கொண்டு புகழ்பெற்ற புண்ணிய தலமான பத்ரிநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
தீபாவளி என்றதுமே பட்டாசுகளுக்கும், ஸ்வீட்டுகளுக்கும் தான் ஞாபகம் வரும். நிறைய ஸ்வீட் சாப்பிடுவதால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படும் எனவே அஜீரணக் கோளாறுகளை நீக்குவதற்கு தீபாவளி லேகியத்தை சாப்பிடவேண்டும்.
லேகியம் செய்யும் முறை:-
*1௦ கிராம் அரிசி திப்பிலி, 1௦ கிராம் கண்டந்திப்பிலி, 1௦ கிராம் சுக்கு, 1௦ கிராம் சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும்
நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.