தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அவர்களின் பதவிக்காலம் நாளை(ஆகஸ்ட் 27) முடிவடைகிறது.
இவருக்கு பதிலாக தீபக் மிஸ்ரா நியமனம் அவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 2018-ம் ஆண்டு அக்டோபர் 2 வரை பதவிவகிப்பார் என தெரிகிறது.
ஜே.எஸ்.கெஹர் உச்ச நீதிமன்ற 44-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த ஜே.எஸ்.கெஹர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முதல் சீக்கியர் என்னும் பெருமையை பெற்றவர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4-ம் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 19-ம் மற்றும் 20-ம் தேதிகளில் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குற்றங்களுக்காக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை 2 வழக்குகளை பதிவு செய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதி மன்ற முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
டுவிட்டரில் கூறியதாவது:-
“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என பதிவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.