ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் மோத உள்ளது.
இதன் கடைசி 20 ஓவர் போட்டி அக்டோபர் 29-ம் தேதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்ப சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதில் ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பலருடைய பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
இதனையடுத்து, நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டது.
27 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு, எல்லை கடந்து சென்ற 55 வயதான இந்தியர் ஒருவர், சட்டவிரோதமான வழியில் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். இவரை தற்போது புலனாய்வு பணியகம் (ஐபி) காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றது.
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவன்.
தற்போது ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதற்காக பாக்கிஸ்தான் கராச்சியை சேர்ந்த 7 வயது பெண்ணுக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது.
வெளிவுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்!
Yes, we are allowing Visa for your 7 years old daughter's open heart surgery in India. We also pray for her early recovery. https://t.co/bFmUXriQCC
லாகூரில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 300 எட்டியுள்ளது. இருப்பினும் இந்தியாவிடமிருந்து தக்காளியை இறக்குமதி செய்ய மாட்டோம் என அந்நாட்டு உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் கூறியுள்ளார்.
இப்போது உள்ளூர் வியாபாரிகள் சிந்து மாகாணத்தில் இருந்து தாக்காளி வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் என அந்நாட்டு மீடியா கூறியுள்ளது.
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்கிறது என்று ஐ.நா., சபையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'பெல்லட்' குண்டுகளை இந்தியா பயன்படுத்துகிறது என்று பாகிஸ்தான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு ஆதாரமாக, ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் தூதர், மலீஹா லோதி, ஒரு படத்தை காட்டினார்.
கடந்த, 2014-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய விமானப் படை தாக்குதலில் ஒரு இளம்பெண் காயமடைந்தார். அந்தப் படத்தைக் காட்டி, ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் காயமடைந்ததாக ,லோதி கூறினார்.
ஐ.நா.,வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா திமிரோடு பேச்சு பேசியதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சமீபத்தில் ஐ.நா.,வில் பொது சபையில் பேசினார். அவர் பேசும் போது இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசினார். இந்தியா ஐ.டி., துறையில் உலகிற்கு சவால் விட்டு வருவதாகவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு தலைமையிடமாக இருப்பதாவும், இந்தியாவில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், அறிஞர்களை உருவாக்கி அவர் கூறி இருந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 72-வது கூட்டத்தில் இந்தியாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையினில் பாகிஸ்தான் தூதர் மல்லிகா லோகி வெளியிட்ட புகைப்படம் தவறானது என தகவள்கள் வெளியாகி வருகின்றன.
இன்று, இந்தியா தனது முதல் டி20 கோப்பையினை கைப்பற்றிய தினம்!
செப்டம்பர் 24, 2007 அன்று, ஜோகன்னஸ்பர்க்கில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பையினில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தினம். இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இந்த வெற்றியின் நொடிகளை BCCI தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாததிற்கான அடிப்படை தளமாக பாகிஸ்தான் இருக்கின்றது, எனவே பாக்கிஸ்தானை ’டெரரிஸ்தான்’ என இனி அழைக்கலாம் என ஐநா சபையினில் தனது கடுமையான விமர்சனத்தை இந்தியா முன்வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஎஸ்எப் கான்ஸ்டபிள் பிரிஜேந்திரா பகதூர் சிங் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஜேந்திர பகதூர் சிங் வீர மரணம் அடைந்தார்.
மேலும் இந்த தாக்குதலில் பொதுமக்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பை தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2007 டிசம்பர் 27-ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியும் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
தாவூத் இப்ராஹிம் கண்டுபிடிப்பதில் பாகிஸ்தான் ஏன் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என பாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்
கூறியுள்ளார்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி கூறி இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், ராஜீவ் மெரிஷி கருத்துக்கு பதில் அளித்து பேசுகையில்,
பாகிஸ்தானின் செயல்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்:-
பயங்கரவாத இயங்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது.
ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால், பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும். ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதால் ஆப்கானிஸ்தான் பெரிய இழப்புகளைச் சந்தித்துவருகிறது.
கடந்த ஜூன் மாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து நிதி பெற்றதாக புகார் எழுந்த நிலையில் தலைநகர் டெல்லி மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனையில் ஈடுபட்டது.
இந்த சோதனையில் காஷ்மீரில் 14 இடங்களிலும் டெல்லியில் 8 இடங்களில் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தீவிரவாத செயல்களுக்கு நிதி பெறப்படுவதாக எழுப்படட்ட புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு காஷ்மீரில் இன்று மீண்டும் சோதனை நடத்தியது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மெண்டார் செக்டரில் அமைத்துள்ள எல்லை கோட்டை தண்டி இன்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீனாவின் உதவியுடன், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் உள்ள சிந்து ஆற்றின் மீது பாக்கிஸ்தான் ஆறு அணைகளைக் கட்ட திட்டமிடுள்ளது.
முன்னதாக இத்திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக சீனா ஒப்புக்கொண்டது, எனவே, தற்போது அணையை கட்டியெழுப்ப உதவு முன்வந்துள்ளது என மாநில வெளியுறவு அமைச்சர் மற்றும் ஓய்வுபெற்ற தளபதி வி.கே. சிங் ஆகியோர் தெரிவித்தனர்.
Pak constructing six dams on Indus river in Pakistan Occupied Kashmir with assistance committed to those projects by China: MoS MEA VK Singh
பாக்கிஸ்தானின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று பரபரப்பான சுழலில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.
PTI அறிக்கையின்படி, பாகிஸ்தான் வலைத்தளத்தில் இந்திய தேசிய கீதம் மற்றும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்த வாழ்த்து செய்தி பதிவிடபட்டுள்ளது என தெரிவித்தது.
முன்னதாக பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.pakistan.gov.pk சிறிது நேரம் முடக்கப்பட்டது. எனினும், அது பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.