இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெறுகிறது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் இன்று நடைபெறுகின்றது.
முன்னதாக முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3 ஒருநாள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
முதலில் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 51 ரன்கள் எடுத்தார். ரகானே (46), திரிபாதி (38) ரன்களும் எடுத்தனர்.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்து உள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
புனே சூப்பர் ஜெயன்ட் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி அடைந்துள்ளது. கடைசியாக வலுவான மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்பி ரவீந்திர கெய்க்வாட்.
சிவசேனா எம்பி ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது, விமானத்தினுள் அமரும் சீட் ஒதுக்கீடு காரணமாக பிரச்சினை எழுந்தது.
அதுகுறித்து ஏர் இந்தியா விமான ஊழியர் விசாரித்த போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி விமான ஊழியரை சிவசேனா கட்சி எம்பி அடித்துள்ளார்.
இன்று நடைபெறும் இந்திய ராணுவ பணியாளர் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தானே குற்றப்பிரிவு காவல்துறையினர் ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியாகியுள்ளது என்ற தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று இரவு நாடு முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், புனே, நாசிக் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது நடத்திய விசாரணையில் மாணவர்கள் 2,00,000 ரூபாய் கொடுத்து வினாத்தாளை வாங்கி, லாட்ஜில் அதற்கான விடைகளை எழுதியது தெரியவந்துள்ளது.
மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 25 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.
நேற்று புனேயில் நடந்த முதல் டெஸ்ட் டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டு இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஸ்கோரை விட அதிகமாக நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதாவது 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், அஸ்வின், 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நேற்று புனேயில் நடந்த முதல் டெஸ்ட் டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டு இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஸ்கோரை விட அதிகமாக நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதாவது 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், அஸ்வின், 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது பேட்டிங்கை ஆடி வருகிறது. தொடக்க வீரராக முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களம் இறங்கியுள்ளனர்.
புனேயில் நடந்த முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டு இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் புனேயில் இன்று தொடங்கியது. புனேயில் முதல் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டதால், இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை நடத்தும் 25-வது மைதானம் என்ற பெருமை பெற்றது.
ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். அதன் படி இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே இதுவரை நடந்துள்ள 90 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியா 40 வெற்றிகளையும், இந்தியா 24 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 25 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இன்றைய போட்டி விருவிருப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.