தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் (FEFSI ) தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினை வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக சினிமா படப்பிடிப்புகளில் வெளியாட்களை வைத்து பணியாற்றக்கூடாது என வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெப்சி கூட்டமைப்பு ஈடுப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் பெப்சி தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்ற ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வருடன் நேற்று அந்த கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஜாக்டோ-ஜியோ நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ-ஜியோ மற்றும் ஜாக்டோ அமைப்புகள் அறிவித்தன.
ஆனால் 60க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்த புதிய ஜாக்டோ-ஜியோ அணியினர் வேலை நிறுத்தத்தில் இன்று முதல் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மொத்தமுள்ள 27 சங்கங்களில் 6 சங்கங்கள் இந்தக் காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்பு. மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டமும், நாளை மறியல் போராட்டமும் நடைபெற உள்ளன.
கடந்த 30-ம் தேதி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜ.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி தீர்ப்பு ஒத்தி வைத்தார்.
தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சியது மேலும் இந்த ஊழலில் சினிமா துறை சிக்கி தவிக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் கூறியது:-
தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது.
இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
தமிழக அரசின் 30% கேளிக்கை வரி விதிப்பு மூலம் தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது என நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 30% கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி உள்ள திரையங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:-
"தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது.
குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வரும் ஜூலை 4-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஊழலை மூடி மறைக்க தமிழக அரசு முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மாட்டுக்கறி விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து, சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறைச்சிக்கான கால்நடைகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு புதிய நிபந்தனைகளை மத்திய அரசு புகுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற ஐஐடி ஏரோஃபேஸ் மாணவர் மாட்டுக்கறி விருந்தை நடத்தினார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா பாலத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கத்திப்பாரா மேம்பாலத்தில், விவசாயிகள், மீனவர் பிரச்னை தொடர்பாக இயக்குநர் கவுதமன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால், இயக்குநர் கவுதமன் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஏதிராக நெடுவாசலலில் மீண்டும் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, இறக்குமதி செலவும் குறையும். இதற்காக ஏக்கர் கணக்கில் விவசாயிகளிடம் அரசு நிலத்தை குத்தகையாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வரலாற்று சிறப்பு மிக்க போராட்டமாக அது மாறியது. ஜல்லிக்கட்டுக்கான தடையும் மாணவர்கள் போராட்டத்தால் விலகியது.
இதன் பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்காகவும், குரல் கொடுக்க போவதாக இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்து இருந்தனர். இதன் காரணமாக மெரினாவில் மாணவர்கள் மீண்டும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
குடிநீர் தொட்டி அமைக்காத கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து வாழைமரம் நடும்போராட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தொட்டியை அமைக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொள்ளும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தண்ணீர் தொட்டி கட்ட தோண்டிய இடத்தில் வாழைமரம் நடும்போராட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
கடந்த 6-ம் தேதி இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ (22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதி ஜெகன்நாதன் தெருவில் உள்ள சிந்தாமணி நியாய விலைக்கடை, ராஜா தோட்டம் பகுதியில் உள்ள அமுதம் நியாய விலைக்கடை, வார்டு எண்.64 இல் சன்னதி தெருவில் உள்ள நியாய விலைக்கடைகளில் ஆய்வு செய்தார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நேற்று காலை வெளியேற்றப்பட்டார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.
நேற்று முதல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து டிவீட் செய்த கமலஹாசன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
இதையடுத்து பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போரட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தர சட்டம் இயற்றக் கோரி கடந்த 17-ம் தேதி முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சில தீய சமுக விரோதிகளால் திடீரென வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என பிரபலங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.