உத்தரபிரதேச மாநிலம் பிஆர்டி அரசு மருத்தவக் கல்லூரியில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர் கதையாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்தவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்தது. அந்த வகையில் தற்போது நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதிக்குள் இதுவரை 58 குழந்தைகள் உயிரிழந்தன.
உயிரிழந்த 58 குழந்தைகளில் 32 பேர் 1 மாதத்தின் கீழ் உள்ளவர்கள் என்றும் மீதமுள்ள 26 பேர் 1 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் என்றும் சமூக நலத்துறை தலைவர் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ஓய்வு பெற இமாச்சல் மாநிலத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், உடனே அவர் டெல்லி புறப்பட்டு வந்தார். டெல்லி வந்த அவரை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.
நடராஜனுக்கு அறுவை சிகிச்சை அளிக்க, செய்த அவசர ஏற்பாடுகளை, ஜெயலலிதாவிற்கு, சசிகலாவின் குடும்பம் ஏன் செய்யவில்லை?' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
திரு. நடராஜன் அவர்களுக்கு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை அவரது தனி மனித உரிமை.ஆனால் அது பல உண்மைகளை உலகரியச் செய்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சட்ட விதிகளுக்குட்பட்டே நடந்துள்ளது என சொல்லப்பட்டாலும் இந்த உதாரணம் எப்படி ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவினால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரலில் பிரச்சினை இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு இவர் முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தற்போது குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் கல்லீரல் கண்டிப்பாக மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் யாரும் பார்க்கவில்லை. சசிகலா தரப்பு என்ன கூறியதோ அதையே மக்களிடம் தெரிவித்தோம்” என்று பேசினார்.
மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் மாவட்ட மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 6 நிமிடத்திலேயே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:03 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பாவ்னா சந்தோஷ் ஜாதவ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு ஆதார் எண் கேட்டு பெற்றோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்த அடுத்த 6 நிமிடத்தில் அதாவது 12.09 மணியளவில் குழந்தைக்கான ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்தவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளர். இவருக்கு ஈரல் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக இலண்டன் கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல மருத்துவரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான முகம்மது ரீலா சென்னை வந்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, சிறைத்துறை அனுமதி பெற்று பரோலில் செல்வாரா அல்லது தனது ஸ்டைலில் செல்வாரா கணவரை பார்க்க!
கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியை அடுத்து, ஃபருகாபாத் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்பிரதேசம் மாநிலம் ஃபருகாபாத் மாவட்டத்தில் உள்ள ராம் மனோகர் லோகியா ராஜ்கியா சிகிட்சாலே மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது.
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்த விபத்தில் 7 குழந்தைகள் மூளை அலர்ஜி காரணமாகவும் மற்றவர்கள் மற்ற காரணங்களுக்காகவும் பலியாகியுள்ளர். இந்த தகவலை பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணைக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்பெயினில் சேவிலே அருகே தாஸ் ஹெர்மனாஸ் என்ற நகரத்தை சேர்ந்தவர் ரோசியோ கார்டெஸ் நுனெஷ். இவருக்கு வயது 25. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த இவரை கேவிலே நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமத்திருந்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
அதைத் தொடர்ந்து அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வார்டுக்கு லிப்ட் மூலம் கொண்டு சென்ற போது லிப்டுக்குள் நுழையும்போது எதிர்பாராத விதமாக அது செயல்பட தொடங்கியதால் அந்த நேரம் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த ரோசியோவின் தலையை லிப்ட் கதவு நசுக்கியது.
ஜார்க்கண்டியில் ராஜேந்திரா மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ .1,350 தேவை ஆனால் 1,300 மட்டுமே சந்தோஷ் குமார் இருந்தது .அவருக்கு தேவையான ஐம்பது ரூபாய் நிதி பற்றாக்குறையால் தான் ஒரு வயது ஆண் குழந்தையின் உயிர் பறி கொடுத்தார்
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 70 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. அரசு தரப்பில் மறுக்கப்பட்டு மூளை அழற்சி காரணம் என கூறுப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.