தொண்டையில் செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சிகிச்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இதுவரை 70 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து உ.பி., அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து உ.பி அரசாங்கம் அக்கல்லூரி நோடல் அதிகாரி Dr. கபில் கான் -வை நீக்கம் செய்துள்ளது.
துரிதமாக செயல்பட்டு எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர் காபீல் கான்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணையை நடைபெற்று வருகிறது.
சீனாவில் உள்ள ஜீஜியாங்கின் வென்ஜோ சென் மத்திய மருத்துவமனையில் 19 வயது சிறுவனுக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்து வியப்பை ஏற்படுதிள்ளனர்.
சீனாவின் கிழக்கு ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள கங்கான் மாவட்டத்தை சேந்த இளைஞர் சியோ தனது 13வது வயதில், தன்னுடைய வலது மார்பின் ஒருபகுதி இயல்பு நிலைக்கு மாறாக அதிக வளர்ச்சி அடைவதை கவனித்துள்ளார்.
மருத்துவர்களை அணுகிய பொது அவருடைய வலதுபுற மார்பு பெண்களை போலவும், இடதுபுற மார்பு ஆண்களை போலவும் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தனர்.
அரசு மருத்துவ கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் உயிரிழப்பு. இதனையடுத்து உ.பி அரசாங்கம் அக்கல்லூரி முதல்வரை சஸ்பெண்டு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரிவு வரியாக பலி எண்ணிக்கை:-
மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழப்பு.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் பிஆர்டி மெடிக்கல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல் படுகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ஸிஜன் பயன் பாட்டிற்க்கான கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படததால், ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளின் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு அதற்கான இடங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி அந்த மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபை கூட்டத் தொடரிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக அரசு அனுப்பிய விவரங்கள் போதவில்லை கூடுதல் விபரங்களை அனுப்புமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.
டெல்லியில் காஷ்மீரி கேட் அருகே ஒரு நடைபாதையில் நேற்று இரவு மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மீது கார் ஏறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காரை ஓட்டி வந்த 12-வது பள்ளி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சுமார் காலை 5.45 மணியளவில் நடைப்பெற்றது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேமுதிக தலைவர் விஜய காந்த் உடல்நலக் குறைவு காரணத்தால் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை மணப் பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார்.
காட்பாடி அருகே கோரந்தாங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கடம் இடிந்ததில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோரந்தாங்கலில் தனியார் நிறுவனம் பள்ளிக் கட்டிடம் கட்டி வருகிறது. இன்று கட்டிடம் கட்டும்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சுமார் 20 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது துரிதகதியில் மீட்புப் பணி நடந்து வருகிறது. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.
இந்தி நடிகர் வினோத் கன்னா திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக மும்பை கிர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டாக்டர்கள் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் வினோத் கன்னாவின் மகன் ராகுல் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார்.
முன்னாள் தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ராமமோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தப்பட்டது. அவரது வீடுகள், அலு வலகங்களில் சோதனை நடத்தி ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 15 குழந்தைகள் அட்மிட் செய்து வைத்திருந்த வார்டில் அதிகாலை 3.35 மணியளவில் தீ பற்றி எரிந்தது. ஆறு முதல் ஏழு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக மேலதிகாரிகள் கூறியுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவின் மகன் ராகேஷ் பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
பிறந்த நாளை கொண்டாட பெல்ஜியம் சென்ற அவர் கணைய அலட்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகேஷ், பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் இன்று பிற்பகல் உயிரிழந்தார். கணையம் முற்றிலுமாக செயலிழந்து விட்டதை அடுத்து அவரது உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பேரணியில் தற்கொலை படையை சேர்ந்த 3 பேரின் குண்டு வெடித்ததில் 50 பேர் பலியாகி உள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் காபூலில் தெக் மசங்கில் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக மின்சார லைனைக் கொண்டு செல்லக் கோரி மாபெரும் பேரணி நடந்து கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது தற்கொலை படையை சேர்ந்த 3 பேர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைத்துள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்வார்பேட்டையில் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.