டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம் காணப்பட்டது.
ஹரியானாவில் அதிகாலையில் நீண்ட தொலைவு செல்லும் பஸ்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மாநிலங்களில் காற்று மாசுடன் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. காற்று மாசுடன் கூடிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கு மேல் தாமதமானால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இதுகுறித்த தகவலை எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் குறித்த விவரங்கள் ஏற்கெனவே எஸ்எம்எஸ்-சாக அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, ரயில் காலதாமதமானால் அந்த விவரத்தை எஸ்எம்எஸ்சாக அனுப்ப ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க இந்தியன் ரயில்வே முன்பதிவு வசதியை கொண்டு வந்தது.
இதில் மாதத்திற்கு ஆறு டிக்கெட்டுக்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று நடைமுறை இருந்து வந்தது.
தற்போது ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்பதில் மத்திய அரசு அனைத்திற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என்று ரயில்வேத் துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை பிற்பகல் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதனையொட்டி ரசிகர்கள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பறக்கும் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
Additional MRTS services @DrmChennai pic.twitter.com/c5RKRBcGCn
இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று இரவு 8:30 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் இன்று இரவு 10:15 மணிக்கு புறப்படும்.
Special Train Rescheduled @DrmChennai @SalemDRM pic.twitter.com/cPg2JXHFZ4
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ரயிலில் உள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்:-
இந்த புல்லட் ரயில் மணிக்கு, 320 கி.மீ வேகத்தில் செல்லும்.
அகமதாபாத் - மும்பை இடையே 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே துவக்கி வைத்தனர்.
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைப்பெற்றது..
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
ரயில் பயணத்தின்போது தங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வடிவ ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள, 'எம் ஆதார்' என்ற ஆப்-பை பயன்படுத்தி ஆதார் அடையாள அட்டையை, மொபைல் போனுக்கு பதிவிறக்கம் செய்யலாம்.
ஆதார் அட்டையில் எந்த மொபைல் எண் உள்ளதோ அந்த எண் பயன்படுத்தப்படும் மொபைல்போனில் மட்டுமே இந்த ஆப்-பை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் நாளை காலை 7.15 மணிக்கு புறப்படும். இணை ரயில் தாமதமாக வருவதால் மும்பை மெயில் 7 மணி 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
ஒவ்வொரு வருடம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று பழமையை நினைவுகூரும் வகையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் பாரம்பரிய ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் வருடந்தோறும் இத்தகைய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று தவிர்க்க முடியாத காரணங்களால் பாரம்பரிய ரயில் இயக்கப்படவில்லை. இதனால் இஐஆர்-21 ரயில் என்ஜினுடன் கூடிய ரயிலை செப்டம்பர் 10 இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
உலகிலேயே தற்போது இயங்கிக்கொண்டு இருக்கும் பழமையான ரயில் என்ஜின்களில் ஒன்று இதுவாகும்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொபைல் இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் வண்டி எஞ்சின் மோதியது.
விழுப்புரம் மாவட்டம் மெல்னரியப்பனூரில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பு, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Train engine hits a tractor in Melnariyappanur(Vilupuram). No Injuries #TamilNadu
எகிப்தின் கடலோர நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகே இரண்டு ரயில்கள் மோதியதால், இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர். 180 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தற்போது மீட்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் படுகின்றனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், இரண்டு ரயில்களின் குப்பைகள் அகற்றப்பட்ட பிறகு இறப்பை குறித்து இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என எகிப்திய அமைச்சரவை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளன.
ரக்ஷா பந்தன் பண்டிகை நாளில் தனது சகோதரன் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் பிறந்த சகோதரிகள் கையில் ராக்கி கட்டி விடுவார்கள்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் என்பவர் தனது சகோதரி உடன் ரக்ஷா பந்தன் கொண்டாட நேற்று ஹரியானா மாநிலம் சென்றுள்ளார். இதையடுத்து, இரவு பானிபட் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ரயிலானது ஒரு ரயில் நிலையத்தில் நின்றுள்ளது.
சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீப காலத்தில் சி.ஏ.ஜி., தனது அறிக்கையில், ரயில்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என ரயில்வேக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு திட்டங்களின் துவக்க விழா நடைபெற்றது.
ஆப்பிள் நிறுவனத்த்தின் உதவியுடன் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்ற தொழில் வர்த்தக கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு பேசினார் அப்போது:-
நாடு முழுவதும் ரயில் சேவையின் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். இதற்காக ரூ.18000 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு மத்திய அரசின் ஒப்பதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.