ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு இஸ்மாயில் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நொவாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார். யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் நடத்திய மற்றொரு பயங்கரவாதியும் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் தீவிரவாதி உமர் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்போராவில், பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தீவிரரவாதி உமர் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின், அபு இஸ்மாயில் குழுவை சேர்ந்தவன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இன்று காலை ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதியான பஷீர் லஷ்காரி மற்றும் இந்த இயக்கத்தை சேர்ந்த மற்ற 2 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள தாய்ல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்யடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
கடந்த 2006-ம் ஆண்டு அவுரங்காபாத் அருகே மே 8-ம் தேதி 10 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 3 ஆயிரத்து 200 தோட்டாக்கள் மற்றும் 30 கிலோ வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கடத்தி சென்ற 2 சொகுசு கார்களை தீவிரவாத தடுப்பு படையினர் பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரை கைது செய்தனர். இதில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு ஜூண்டாலும் ஒருவர்.
காஷ்மீரில் நாங்கள்தான் வன்முறையை தூண்டிவிட்டோம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளான்.
பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியே என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளதாக இந்தியா டுடே செய்திவெளியிட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.