இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
விராட் கோலி, அனுஷ்கா சர்மா இடையே திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியானது. இந்த திருமணம் எங்கு நடக்கும், யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகாமல் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை நிறைவு செய்துள்ளார். இப்போது அவரின் அடுத்த சாதனை சச்சின் 100 சதங்களை சாதனை உடைப்பது தான். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை தொடக் கூடிய தூரத்தில் சில நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். முதலில் யார் 100 சச்சின் சாதனையை உடைப்பார்கள் என்பதை பார்ப்போம்.
டோனிக்கும் எனக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த பலர் முயற்சி செய்தார்கள் என்று இந்திய கிர்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டோனியுடன் இருக்கும் உறவு குறித்த கேள்விகளுக்கு கோலி பதில் அளித்தார். அதில், எங்களுக்கு இடையில் விரிசலை உருவாக்கும் நோக்கில் பலரும் பேசினார்கள். ஆனால், நாங்கள் அதுபோன்ற செய்திகளை படிப்பதே இல்லை.
நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்கும் போது அவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். எங்களுக்கிடையில் விரிசல் ஏற்படாதா என்று பார்க்கிறார்கள். நாங்கள் அதனைப்பற்றியெல்லாம் எங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வோம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்தபிறகு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி தன்னுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கேக் வெட்டிய படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வீடியோ பார்க்க:-
1999-ம் ஆண்டு முதல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆஷிஷ் நெஹ்ரா கடந்த நவம்பர் 1-ம் தேதியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் அசாருதின் தலைமையில் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர், தற்போதைய இந்திய கேப்டன் விராத் கோலி தலைமையில் கடைசி போட்டி விளையாடி உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு அவருக்கு சக இந்திய வீரர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை தந்தனர். இந்த பிரியாவிடையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சேவாக் என பலர் கலந்துக்கொண்ட வீடியோ காட்சி:-
போர்பஸ் பத்திரிகை விலை மதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களில் உலகின் ‘டாப் 10’ விளையாட்டு வீரர்களில் மிகவும் மதிப்பு மிக்கவர்களில் வீராட் கோலி 7வது இடத்தில் உள்ளார்.
அவரது மதிப்பு ரூ.93 கோடியாகும். பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி ரூ.87 கோடி விலை மதிப்புடன் 9-வது இடத்தில் உள்ளார்.
இந்திய கிர்கெட் வீரர் விராட் கோலி தனது அபாரமான ஆட்டம் மூலம் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறார். அந்த வகையில், மிகவும் மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலில் விராட் கோலி விலை மதிப்பு மிக்க வீரர்களில் பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை முந்தி உள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷம் தான் இந்திய அணியின் பலம் என்று முன்னாள் இந்திய கிர்கெட் அணி சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார். இது அவரது 200-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை முந்தினார் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் ’விராத் கோலி அறக்கட்டளை’ மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனம் இரண்டும் இணைந்து, தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் விதமாக நட்சத்திர கால்பந்து போட்டி நடத்தியது.
மும்பையில் கடந்த அக் 15-ஆம் நாள் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியும், பாலிவுட் நட்சத்திரங்கள்(ஆல் ஸ்டார் எஃப்சி) அணியும் மோதின.
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியில் 5-வது நிமிடத்தில் டோனி அடித்த கோல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் டோனியின் மகள் ஸிவாவுடன் விளையாடி பொழுது போக்கிய வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில்நடைபெற்று இந்தியா வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா முதன் முறையாக விளையாடி 85 ஆண்டுகள் ஆகின்றது. 1932 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடியது.
1932 தொடங்கி இதுவரை இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தவர் ஹார்டிக் பாண்டியா.
சரியான நேரத்தில் டேவிட் வார்னரின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியது, சிக்கலான சமையங்களில் சிறப்பான பந்துவீச்சு என நேற்றைய ஆட்டத்தினில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பாண்டியாவின் இந்த செயல்களைப் பாராட்டி அணித்தலைவர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தினில் வீடியோ ஒன்றினை பதிவேற்றியுள்ளார்.
குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
விராட் கோலி பல்வேறு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி வருகிறார். ஆனால் தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பான விளம்பர ஒப்பந்தம் ஒன்றை அவர் மறுத்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது.
காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை. எனவே தான் அருந்தாத ஒன்றை மற்றவர்களுக்கு விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மருத்துள்ளதாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி தெரிவித்தார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. டி-20 கிரிக்கெட் போட்டியை 1-0 கணக்கில் இந்தியா வென்றது.
இலங்கைக்கு எதிரான ஒட்டுமொத்தத் தொடரையும் 9-0 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியை முழு ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
இலங்கை சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி தற்போதைய தலைமுறையின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இவரது வெற்றி நீண்ட தூரத்திலிருந்தும், நிறைய தடை கற்களையும் தாண்டி வந்துள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும், தனது ஆசானை கோலி பாவிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஆசிரியர்கள் தினமான இன்று உலகின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.