சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சோதனையின் போது ரூபாவிடம் அதிகாரிகள் கூறினார்கள்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா
பல்வேறு வசதிகள் செய்து தர 2 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா இன்று தீடிரென்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ஓட்டலில் அறை ஒதுக்க ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது.
கேரளாவை சேர்ந்தவர் ஷபீக் சுபைதா ஹக்கீம் மற்றும் அவரது மனைவி திவ்யா. ஹக்கீம் தனது பணி தொடர்பாகவும் அவரது மனைவி திவ்யா சட்ட பல்கலையில் பி.எச்டி தேர்வில் பங்கேற்கவும் பெங்களூரு வந்தனர்.
அவர்கள் சுதமா நகர் அனிபுரம் மெயின் சாலையில் உள்ள ஆலிவ் ரெசிடன்சி ஓட்டலுக்கு சென்று அறை கேட்டுள்ளனர்.
ஆனால், ஊழியர் இந்துவும், முஸ்லிமும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது எனக்கூறி அறை ஒதுக்க மறுத்து விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் அருகில் உள்ள வேறு ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கினர்.
பிதரமர் மோடி டிவிட்டரில் பெங்களூரு இளைஞரை பின் தொடருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் ஜெயின். ஆகாஷின் சகோதரியின் திருமணத்துக்காக அவரது குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள், விலங்குகளை பார்வையிட வாகனங்கள் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் சென்ற ஒரு வாகனத்தை இரு சிங்கங்கள் முற்றுகையிட்டு விரட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.
காரின் முன் புறம் ஏறுவதற்கு ஒரு சிங்கம் முயற்சி செய்கிறது. அந்த கார் நகரும் போது, அதை நகர விடாமல் தடுக்க இரு சிங்கங்களும் முயற்சி செய்கிறது. எனினும் அந்த கார் டிரைவர் சாதுர்யமாக காரை ஓட்டினார். ஒரு ஆண் சிங்கம் அந்த காரை பின்னால் விரட்டிக் கொண்டே ஓடும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
பெங்களூருவில் தனியார் ஷாப்பிங் மால் நிறுவன பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெல்லாரி நிலக்கரி சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் பா.ஜ.க கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா விடுதலையாகியுள்ளார். வாய்மை வென்றுள்ளது என்று எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டதால் கன்னட அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டனர்.
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் பிறகு கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மாதம் செப். 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் முழு போராட்டம்.
கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் முழு போராட்டம்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் பல கன்னட அமைப்புகள் மற்றும் சங்கங்களும் மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரித்துள்ளன.
பெங்களூருவில் போலீசாரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்றம் நிலவுகிறது.
பெங்களூரு நகரின் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகில் கல்லூரி ஒன்றில் கடந்த 13-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஷ்மீரிகள் சிலர் இந்திய ராணுவத்தினர், தங்களுக்கு தொந்தவு கொடுத்தாக கூறி ராணுவத்திற்கு எதிராக கோஷம் எழப்பினர். காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும்படியும் கோஷமிட்டனர்.
பஞ்சாப் மாநிலம் பட்டான்கோட் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடியிருப்பு, ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டதாக கூறி பெங்களுரு மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை இடித்து அகற்றியதால் பரபரப்பு எற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையினால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 7 ஆண்டு கால வரலாற்றில் தற்போதைய மழை பெரும் பொழிவாக இருந்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
பருவ மழை கர்நாடகாவில் 2 நாட்களாக பெய்து வருகிறது. இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதில் மைசூரு, மாண்டியா, அத்திபேலே, பெங்களூரு புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. பெங்களூருவில் பெய்த மழை 156 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு மங்களூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் விரைந்து சென்றது. இதில் 65 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகள் இருந்தனர். சற்று நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து புகை வெளியானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.